என் மலர்
நீங்கள் தேடியது "சரக்கு கப்பல் விபத்து"
- கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.
கொச்சிக்கு பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்த சரக்கு கப்பல் கடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. விழிஞ்சத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு MSC ELSA3- கப்பலில் பொருட்கள் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது.
கப்பல் கொச்சியிலிருந்து தென்மேற்கு சுமார் 38 மைல் தொலைவில் இருந்ததுபோது கடலில் சாய்ந்தது. அப்போது கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் விழுந்தது. இதனை தொடர்ந்து கப்பல் நிர்வாகம் உதவி கோரி இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து, மீட்பு பணியில் 2 கப்பல்களும் ராணுவ ஹெலிகாப்டரும் ஈடுபட்டது. இந்த மீட்பு பணியில் கப்பலில் இருந்த 24 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் இருந்த ரசாயனம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரை ஒதுங்கிய பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு கடற்படை அறிவுறுத்தியுள்ளது.
கிரீமியா:
ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே கெர்ச் ஜலசந்தி உள்ளது. இங்குள்ள கிரீமியா உக்ரைனில் இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு ரஷியாவுடன் இணைந்தது.
அங்குள்ள கெர்ச் துறைமுகத்தில் தான்சானியா நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில் கியாஸ் டேங்கர் கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது.
அப்போது திடீரென தீப்பிடித்தது. அந்த தீ 2 கப்பல்களுக்கும் பரவியது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
அதை தொடர்ந்து ரஷிய மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 2 கப்பல்களிலும் மொத்தம் 31 பேர் இருந்தனர். அவர்களில் 17 பேர் ஊழியர்கள், 14 பேர் பயணிகள்.
இவர்களில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 11 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டனர். இவர்கள் உயிர்பிழைக்க கடலில் குதித்த போது மரணத்தை தழுவினர்.






