என் மலர்
நீங்கள் தேடியது "கேரள தலைமை தேர்தல் அதிகாரி"
கள்ள ஓட்டு புகார் மீது நடவடிக்கை எடுத்த கேரள தலைமை தேர்தல் அதிகாரிக்கு பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார். #PinarayiVijayan
திருவனந்தபுரம்:
கேரளாவில் பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடந்தது.
பாராளுமன்ற தேர்தலின் போது காசர்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கள்ள ஓட்டு போட்டதாக புகார் கிளம்பியது. காங்கிரஸ் நிர்வாகிகள் இது தொடர்பாக கேரள தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனாவுக்கு புகார் மனு அளித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்த அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இதில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.
கேரள தலைமை தேர்தல் அதிகாரியின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்தது. புகாருக்கு ஆளான கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்குச்சாவடியில் இயலாதவர்களுக்கு வாக்களிக்க நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மீது திட்டமிட்டு புகார் கொடுக்கப்பட்டது.
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக் கட்சியினர்தான் கள்ள ஓட்டு போட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கூறினார்.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும், எதிர்க்கட்சியான காங்கிரசும் மாநில தேர்தல் கமிஷன் மீது மாறி மாறி புகார் கூறி வந்த நிலையில் மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், மாநில தேர்தல் கமிஷனர் டீக்காராம் மீனாவுக்கு ஆதரவாக நேற்று கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் தேர்தலின்போது, கள்ள ஓட்டு போடுவதாக புகார் எழுவது வழக்கம். நமது ஜனநாயக நடைமுறை மிகவும் பாதுகாப்பானது. தவறுகள் நடந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வகையில்தான் கேரள தலைமை தேர்தல் அதிகாரி அவரது கடமையை செய்துள்ளார்.
அவருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாம் குறுக்கே நிற்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #PinarayiVijayan

ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்று கேரள தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார். #ParliamentElection #Sabarimala
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க மாநில அரசு எடுத்த முடிவால் மாநிலமே போராட்டக்களமானது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலையொட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீக்காராம் மீனா கூறியதாவது:-
சபரிமலை என்பது மத வழிபாட்டு தலம். எனவே, கோவில் பெயரிலோ, மசூதி பெயரிலோ யாராவது ஓட்டு கேட்டால், அது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும்.

ஐயப்பன் பெயரில் ஓட்டு கேட்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். சபரிமலை பிரச்சினையை எந்த அளவுக்கு பிரசாரத்தில் பயன்படுத்தலாம் என்பதை முடிவு செய்வதில் கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #Sabarimala