என் மலர்

  நீங்கள் தேடியது "Sloane Stephens"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். ரூ.17¼ கோடி பரிசுத்தொகையையும் பெற்றார். #WTAFinal #SloaneStephen #ElinaSvitolina
  சிங்கப்பூர்:

  டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் ஒரு வார காலமாக நடந்து வந்தது. கிராண்ட்ஸ்லாமுக்கு நிகராக வர்ணிக்கப்படும் இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் ஸ்லோனே ஸ்டீபன்சும் (அமெரிக்கா), 7-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவும் (உக்ரைன்) மல்லுகட்டினர்.  முதலாவது செட்டில் 2-வது கேமில் ஸ்விடோலினாவின் சர்வீசை முறியடித்த ஸ்டீபன்ஸ் அதன் தொடர்ச்சியாக முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். 2-வது செட்டில் சுடச்சுட பதிலடி கொடுத்த ஸ்விடோலினா மூன்று முறை எதிராளியின் சர்வீசை ‘பிரேக்’ செய்து அந்த செட்டை தனக்கு சாதகமாக மாற்றினார். கடைசி செட்டிலும் ஆக்ரோஷமாக ஆடிய ஸ்விடோலினாவின் கை ஓங்கியது. பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு தானாக செய்யக்கூடிய தவறுகளை ஸ்டீபன்ஸ் அதிகமாக (48 முறை) செய்ததால், பின்னடைவை சந்திக்க நேரிட்டது.

  2 மணி 23 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்விடோலினா 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றியை ருசித்து முதல்முறையாக இந்த பட்டத்தை உச்சிமுகர்ந்தார். 46 ஆண்டுகால பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் உக்ரைன் வீராங்கனை ஒருவர் இந்த கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

  இந்த தொடரில் ஸ்விடோலினா தோல்வியே சந்திக்கவில்லை. 2013-ம் ஆண்டு செரீனா வில்லியம்சுக்கு பிறகு தோல்வி பக்கமே செல்லாமல் வாகை சூடிய வீராங்கனை ஸ்விடோலினா தான். 24 வயதான ஸ்விடோலினாவின் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பட்டம் இதுவாகும். ‘இது எனக்கு சிறப்பு வாய்ந்த தருணமாகும். எனது செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்கிறது. இந்த வெற்றி நிறைய நம்பிக்கையை கொடுக்கும்’ என்று ஸ்விடோலினா பெருமிதத்துடன் கூறினார். போட்டி கட்டணம், லீக்கில் ஒவ்வொரு வெற்றிக்குரிய பரிசு என்று எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் ரூ.17¼ கோடியை ஸ்விடோலினா பரிசாக அள்ளினார். 2-வது இடம் பிடித்த ஸ்டீபன்சுக்கு ரூ.8¾ கோடி கிட்டியது.  இந்த வெற்றியின் மூலம் ஸ்விடோலினா இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறுகிறார். ஸ்டீபன்ஸ் ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தை பிடிக்கிறார். ருமேனியாவின் சிமோனா ஹாலெப் முதலிடத்தில் தொடருகிறார்.

  இதன் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் டைமியா பாபோஸ் (ஹங்கேரியா)- கிறிஸ்டினா மிலாடெனோவிச் (பிரான்ஸ்) கூட்டணி 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ ஜோடியும், விம்பிள்டன் சாம்பியனுமான செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா-கேத்ரினா சினியகோவா இணையை வீழ்த்தி பட்டத்தை தனதாக்கியது. இவர்களுக்கு ரூ.3½ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

  அடுத்த ஆண்டு இந்த போட்டி சீனாவின் ஷின்ஜென் நகருக்கு மாற்றப்படுகிறது. அத்துடன் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ.50 கோடியில் இருந்து ரூ.100 கோடியாக உயர்த்தப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டியில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள். #WTAFinal #SloaneStephen #ElinaSvitolina
  சிங்கப்பூர்:

  பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் உக்ரைனின் ஸ்விடோலினா 7-5, 6-7 (5), 6-4 என்ற செட் கணக்கில் கிகி பெர்டென்சை (நெதர்லாந்து) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

  மற்றொரு அரைஇறுதியில் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மல்லுகட்டினார். இதில் முதல் 8 கேம்களை வரிசையாக கைப்பற்றிய பிளிஸ்கோவா எளிதில் வெற்றி காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் பிறகு ஸ்டீபன்ஸ் எழுச்சி பெற்று மிரள வைத்தார். 1 மணி 55 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தின் முடிவில் ஸ்டீபன்ஸ் 0-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பிளிஸ்கோவாவை வெளியேற்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ஸ்டீபன்ஸ்- ஸ்விடோலினா இன்று மோதுகிறார்கள். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வுகான் ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்கா வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். #WuhanOpen
  வுகான் ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தரநிலை பெறாத எஸ்டோனியாவின் அனெட் கொன்டாவெய்ட்-ஐ எதிர்கொண்டார்.  முதல் சுற்றை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4 என கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கடும்போராட்டத்திற்குப் பின் 5-7 என இழந்தார். 3-வது செட்டையும் 4-6 என இழந்து தோல்வியடைந்து, முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்து வெளியேறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
  பாரீஸ்:

  கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது.

  இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) மோதினர்.

  ஆட்டத்தின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றிலும் 4-4 என கடும் போட்டி அளித்தார் ஸ்டீபன்ஸ்.

  அதன்பின்னர், சுதாரித்து ஆடிய ஹெலப் சிறப்பாக ஆடி 6-4 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை கைப்பற்றினார். 

  இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் ஹெலப் அபாரமாக விளையாடினார்.
  இதனால் மூன்றாவது சுற்றை 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.

  இறுதியில், 3-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஹெலப். இந்த போட்டி சுமார் 2 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

  முதல் முறையாக கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலப்புக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் மோதுகிறார்கள். #FrenchOpen2018 #SimonaHalep
  பாரீஸ்:

  கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

  பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடக்கிறது. இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.

  ஹெலப் இதுவரை கிராண்ட்சிலாம் பட்டம் வென்றது இல்லை. பிரெஞ்சு ஓபனில் 2 முறை இறுதி ஆட்டத்தில் (2014, 2017) தோற்று இருக்கிறார். இதேபோல இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப்போட்டியில் தோற்றுள்ளார். இதனால் இந்த முறை முதல் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.  ஸ்டீபன்ஸ் 2-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். கடந்த ஆண்டு அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றி இருந்தார். பிரெஞ்சு ஓபனில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளார். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6-4, 6-1, 6-2 என்ற கணக்கில் 5-வது வரிசையில் இருக்கும் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) வீழ்த்தினார். அவர் 11-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

  களிமண் தரையில் விளையாடுவதில் ‘கிங்’காக திகழும் நடால் இறுதிப்போட்டியில் 7-ம் நிலை வீரரான டொமினிக் தியம்பை (ஆஸ்திரியா) சந்திக்கிறார். அவர் அரை இறுதியில் 7-5, 7-6 (12-10), 6-1 என்ற கணக்கில் இத்தாலி வீரர் மார்கோவை வீழ்த்தினார். #FrenchOpen2018 #SimonaHalep
  ×