search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றார் ஹெலப்
    X

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றார் ஹெலப்

    பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது.

    இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஷிமோனா ஹெலப்பும் (ருமேனியா) 10-வது வரிசையில் இருக்கும் ஸ்டீபன்சும் (அமெரிக்கா) மோதினர்.

    ஆட்டத்தின் முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது சுற்றிலும் 4-4 என கடும் போட்டி அளித்தார் ஸ்டீபன்ஸ்.

    அதன்பின்னர், சுதாரித்து ஆடிய ஹெலப் சிறப்பாக ஆடி 6-4 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றை கைப்பற்றினார். 

    இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றிலும் ஹெலப் அபாரமாக விளையாடினார்.
    இதனால் மூன்றாவது சுற்றை 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக கைப்பற்றினார்.

    இறுதியில், 3-6, 6-4, 6-1 என்ற புள்ளி கணக்கில் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஹெலப். இந்த போட்டி சுமார் 2 மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

    முதல் முறையாக கிராண்ட ஸ்லாம் பட்டம் வென்ற ஹெலப்புக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens
    Next Story
    ×