என் மலர்
முகப்பு » Anett Kontaveit
நீங்கள் தேடியது "Anett Kontaveit"
- 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.
- கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
லண்டன்:
எஸ்தோனியா நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் தற்போது தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கிறார். அதிகபட்சமாக 2-வது இடம் வரை முன்னேறியுள்ள அவர் இதுவரை 6 பட்டங்களை வென்றுள்ளார். 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.
இந்த நிலையில் 27 வயதான கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முதுகுதண்டுவட பாதிப்பால் அடிக்கடி அவதிப்படும் அவர் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குறுகிய காலத்திலேயே டென்னிசுக்கு முழுக்கு போடுகிறார்.
வுகான் ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்கா வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார். #WuhanOpen
வுகான் ஓபன் டென்னிஸ் தொடர் நேற்று தொடங்கியது. முதல் சுற்றில் 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தரநிலை பெறாத எஸ்டோனியாவின் அனெட் கொன்டாவெய்ட்-ஐ எதிர்கொண்டார்.
முதல் சுற்றை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4 என கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கடும்போராட்டத்திற்குப் பின் 5-7 என இழந்தார். 3-வது செட்டையும் 4-6 என இழந்து தோல்வியடைந்து, முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்து வெளியேறினார்.
முதல் சுற்றை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4 என கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கடும்போராட்டத்திற்குப் பின் 5-7 என இழந்தார். 3-வது செட்டையும் 4-6 என இழந்து தோல்வியடைந்து, முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்து வெளியேறினார்.
×
X