என் மலர்

  நீங்கள் தேடியது "Shilpa"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஷில்பா டான்ஸ் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. #VijaySethupathi
  விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ‘ஆரண்ய காண்டம்’ இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடிக்கிறார். மேலும் விஜய்சேதுபதியுடன் பகத் பாஷில், சமந்தா, காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

  இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்சேதுபதிக்கு இயக்குனர் நடனம் ஆட சொல்லிக் கொடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. விஜய் சேதுபதி வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி இருக்கிறது.

  தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கும் இந்த படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #SuperDeluxe #VijaySethupathi


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாளையங்கோட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 289 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார். #IASShilpa
  நெல்லை:

  பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 70-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவன பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 289 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கூறினார்.

  தொடர்ந்து கூட்டுறவு துறை சார்பில், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரங்கராட்டினம்’ படத்தின் போஸ்டரை மூன்று பிரபலங்கள் வெளியிட இருக்கிறார்கள். #RangaRaatinamFirstLook
  மகேந்திரன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் இவருக்கு ஜோடியாக ஷில்பா நடித்துள்ளார். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

  இப்படத்தை ‘திட்டக்குடி’ படத்தை இயக்கிய சுந்தரன் எழுதி இயக்கியிருக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வ நம்பி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.   இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 10 தேதி வெளியிட இருக்கிறார்கள். இந்த போஸ்டரை மூன்று முக்கிய பிரபலங்கள் வெளியிட இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் இவரா இருக்கோமோ, அவரா இருக்கோமோ என்று பேசி வருகிறார்கள்.
  ×