search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "displaced persons"

    குறைதீர்க்கும் கூட்டத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.
    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 386 கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2¼ லட்சம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், மாற்றுத்திறனாளிகள் 5 பேருக்கு 3 சக்கர சைக்கிள்களும், 6 பயனாளிகளுக்கு ஓய்வூதியதாரர் உத்தரவு ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் சாரதா ருக்மணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    பாளையங்கோட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 289 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார். #IASShilpa
    நெல்லை:

    பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 70-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவன பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 289 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கூறினார்.

    தொடர்ந்து கூட்டுறவு துறை சார்பில், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    ×