என் மலர்
சினிமா

மகேந்திரன் பட போஸ்டரை வெளியிடும் அந்த மூன்று பேர் யார்?
மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரங்கராட்டினம்’ படத்தின் போஸ்டரை மூன்று பிரபலங்கள் வெளியிட இருக்கிறார்கள். #RangaRaatinamFirstLook
மகேந்திரன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ரங்கராட்டினம்’. இதில் இவருக்கு ஜோடியாக ஷில்பா நடித்துள்ளார். இவர்களுடன் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், முனைவர் கு.ஞானசம்பந்தன், சென்ராயன், வினோதினி, ‘பசங்க’ சிவக்குமார், தவசி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தை ‘திட்டக்குடி’ படத்தை இயக்கிய சுந்தரன் எழுதி இயக்கியிருக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு செல்வ நம்பி இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூன் 10 தேதி வெளியிட இருக்கிறார்கள். இந்த போஸ்டரை மூன்று முக்கிய பிரபலங்கள் வெளியிட இருக்கிறார்கள். அவர்கள் யார் யார் என்பதை மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் இவரா இருக்கோமோ, அவரா இருக்கோமோ என்று பேசி வருகிறார்கள்.
Next Story