search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shenbagavalli amman temple"

    • செண்பகவல்லி அம்பாள் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 9-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாளை (15-ந்தேதி) வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதிஉலா சென்று பக்தர்களுக்கு காட்சி யளிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடிதாரர்கள் சார்பில் விழாகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக 9-ம் திருநாளான நேற்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. 9-ம் திருநாள் மண்டகப்படி வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் நேற்று இரவு நடைபெற்றது. மெயின் ரோட்டில் உள்ள வணிகவைசிய சங்கத்திற்கு பாத்தியப்பட்ட 9-ம் திருநாள் மண்டபத்தில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து இரவு வானவேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

    இதில் வணிக வைசிய சங்க தலைவர் வெங்கடேஷ், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்கமாரியப்பன், சங்கத் துணைத் தலைவர் பரமசிவம், மணிமாறன், மாதவராஜ், கருப்பசாமி, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், மகாலிங்கம், குன்னிமலை ராஜா, முனிய செல்வம், தங்கமாரியப்பன், செல்வம், மாரிச்செல்வம், மாரி செல்வகுமார், சுந்தர், சுபாஷ், காளிதாஸ், மதன், மாரிமுத்து, செல்வா, முன்னாள் சங்கத் தலைவர்கள் காளியப்பன், பூவலிங்கம், பழனி குமார், ஆயில் மில் சுரேஷ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    10-ம் திருநாளான இன்று மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 11-ம் திருநாளான நாளை இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வானவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங்கரிக்கபட்ட தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.

    கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 24­-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய திருநாளான இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கபட்டு. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் ரதரோகணம் நடைபெற்றது. பின்னர் வணிக வைசிய சங்கத்தினர் மண்டகப்படிதாரர்கள் சார்பில் தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக செய்தி மற்றும் விளம்பரதுறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று இரவு 7.30 மணிக்கு வணிக வைசிய சங்கம் சார்பில் மெயின் ரோட்டில் உள்ள 9-ம் நாள் திருநாள் மண்டபத்தில் வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார மற்றும் தீபாராதனைகள் நடைபெறும் பின்பு அங்கு இருந்து அன்னவாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

    10-ம் நாள் திருநாளான நாளை (2-ந் தேதி) காலை அம்மன் பல்லக்கில் திருவீதி உலா, இரவு 7.30 மணிக்கு ரி‌ஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

    11-ம் நாள் திருநாளான 3-ந் தேதி மதியம் 1 மணிக்கு தபசு சப்பரத்தில் அம்மன் தபசுக்கு எழுந்தருளுகிறார். மாலை 6 மணிக்கு சுவாமி ரி‌ஷப வாகனத்தில் பூவன நாதராக அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். 12-ம் நாளான 4-ந் தேதி காலை 8 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதிஉலா நடைபெறுகிறது. அதை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டணப்பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெறும்.

    ×