என் மலர்

  நீங்கள் தேடியது "Seven Cops"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிதிஷ்குமார் வீட்டில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். #NitishKumar
  பாட்னா:

  பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கிறார். இதனால் அவருக்கு எப்போதும் பலத்து பாதுகாப்பு வசதி அளிக்கப்பட்டு உள்ளது. அவரது அலுவலக வீடு பாட்னாவில் உள்ள எண்.1 அனெய் மார்க் பகுதியில் உள்ளது. அவரது வீட்டில் உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருக்கும். தற்போது கட்சி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க அவர் டெல்லி சென்று உள்ளார்.

  இந்த நிலையில் பீகார் மாநில சிறப்பு போலீஸ் அதிகாரி முதல்-மந்திரி நிதிஷ்குமார் வீட்டில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்றார். அப்போது முதல்-மந்திரி வீட்டில் இருந்த போலீசாரின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.

  இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 7 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். #NitishKumar #tamilnews
  ×