search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "setc"

    • பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
    • நேரிலும், ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 முதல் 17-ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வோர் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.

    அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை திங்கள் கிழமையில் வருகிறது. அந்த வகையில், பொங்கலுக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிறு என இரண்டு வார இறுதி நாட்கள் உள்ளன. இதன் காரணமாக பொங்கலுக்கு முந்தைய வார இறுதியில் சொந்த ஊர் செல்வோர், ஜனவரி 12-ம் தேதி சென்னையில் இருந்து கிளம்புவதற்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

    வழக்கமாக அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய ஒரு மாத காலத்திற்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள முடியும். அந்த வகையில் போகி பண்டிகைக்கு முதல் நாளான ஜனவரி 13-ம் தேதி சொந்த ஊர் செல்லும் பயணிகள் நாளை நேரிலும், TNSTC வலைதளம் அல்லது செயலியிலும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    ஊதிய உயர்வு, பிடித்தம் செய்யப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி ஆகியவற்றை வழங்க கோரி, நவம்பர் 1-ம் தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கள் அறிவித்துள்ளன. #TNBusStrike #CITU
    சென்னை:

    ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த ஜனவரி மாதத்தில் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை ஐகோர்ட் தலையிட்ட பின்னர், ஸ்டிரைக் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அப்போது, அரசின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றியது. 

    இந்நிலையில், ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்க வேண்டும், 2003-க்கு பின் பணியில் சேர்ந்த பணியாளர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 1-ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட உள்ளதாக தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

    வேலை நிறுத்தத்துக்கான நோட்டீஸ் விரைவில் போக்குவரத்து மேலான் இயக்குநர் மற்றும் தொழிலாளர் துறை ஆணையரிடம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தீபாவளி பண்டிகையை ஒட்டி தலைநகர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சுமார் 22 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவித்துள்ளார். #Diwali #TNSTC #SETC
    சென்னை:

    தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தலைநகர் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். 

    நவம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் 12 ஆயிரம் பேருந்துகளும், பண்டிகை முடிந்த பின்னர் மீதம் உள்ள பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணா நகர், ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
    ×