search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Senthilraj"

    • செங்கல்பட்டு சப்-கலெக்டராக பணியாற்றி வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப் பட்டார்.
    • லட்சுமிபதி, தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டர் ஆவார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த செந்தில்ராஜ் சிப்காட் மேலாண்மை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.

    இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு சப்-கலெக்டராக பணியாற்றி வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய கலெக்டராக நியமிக்கப் பட்டார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தின் 27-வது கலெக்டர் ஆவார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவர தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.

    புதிய கலெக்டர் லட்சுமி பதிக்கு அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

    • இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • பி.எம்.கிசான் திட்ட பயனாளிகளின் நில ஆவணங்களை தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

    தமிழகத்தில் பிரதமந்தி ரியின் கவுரவ நிதி திட்ட மானது கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    12-வது தவணை

    இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு விவசாய குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் என 3 தவணைகளாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை பதிவு செய்த விவசாயிகளுக்கு 11 தவணை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரிபார்ப்பு செய்வது அவசியம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

    ஆவண சரிபார்ப்பு பணி

    பி.எம்.கிசான் திட்ட பயனாளிகளின் நில ஆவணங்களை தமிழ் நிலம் இணையதளத்துடன் இணைத்து சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

    பிரதமரின் கவுரவ நிதி பெறும் அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களை அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காண்பித்து சரி செய்து கொண்டால் மட்டுமே அடுத்த தவணைத் தொகை கிடைக்கும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

    எனவே, தகுதியான விவசாயிகள் அனைவரும் தாமாகவே முன்வந்து நில ஆவணங்களை சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

    இத்திட்டத்தில் ஆதார் அடிப்படையிலான நிதி விடுவிப்பு நடைபெறுவதால் தகுதியான விவசாயிகள் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்திடவும், பி.எம்.கிசான் வலைதளத்தில் இ.கே.ஒய்.சி. பதிவேற்றம் செய்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    அரசு ரத்த வங்கிகள் குறித்து வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனர் பேட்டியளித்துள்ளார். #PregnantWoman #HIVBlood
    மதுரை:

    எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரிய திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு சிறந்த முறையில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏ.ஆர்.டி. மருந்துகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. வயிற்றில் உள்ள குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவாத வகையில் தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. ரத்த வங்கியில் ஏற்பட்ட தவறு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு எங்கு நடந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.



    இது போன்ற சம்பவங்கள் மறைக்கப்படுவதாக கூறுவது தவறானது. அரசு ரத்த வங்கிகள் குறித்து வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன.

    இது போன்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வருங்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நிச்சயம் நடக்காது. அரசு ரத்த வங்கிகளுக்கு வரும் ரத்தம் முறையாக பரிசோதிக்கப்படுகிறது. தினமும் ஏராளமான நோயாளிகளுக்கு ரத்த வங்கிகள் மூலம்தான் ரத்தம் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #PregnantWoman #HIVBlood
    ×