search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sentenced To Life"

    • கொலை செய்தமைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிபதி வழங்கினார்.
    • 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முன் விரோதம் காரணமாக சதீஷ்குமார் வேலை செய்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சதிஷ்குமாரை வெட்டி கொலை செய்தனர்.

    இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.

    இந்த வழக்கானது பவானி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லதா தீர்ப்பு கூறினார்.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் (45), ஆனந்த பிரபு (37), சூரியகுமார் (27) மற்றும் வெங்கடேஷ்குமார் (38) ஆகிய 4 பேருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    மேலும் வீடு புகுந்து அத்துமீறி கொலை செய்த மைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிபதி வழங்கினார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் தீர்ப்பு கூறினார்.

    இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.

    வங்காளதேசம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற குண்டுவீச்சு வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் உள்பட 19 பேருக்கு ஆயுள், 19 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #KhaledaZia #Hasina #GrenadeAttack
    டாக்கா:

    இந்தியாவின் அண்டைநாடான வங்காளதேசத்தில் இரு பெரும் பெண் அரசியல் தலைவர்களாக ஷேக் ஹசினாவும், கலிதா ஜியாவும் உள்ளனர்.

    இவர்களில் தற்போதைய பிரதமராக பதவி வகிக்கும் ஷேக் ஹசினா, மறைந்த முன்னாள் பிரதமரும் வங்காளதேசம் என்னும் தனிநாடு உதயமாக வித்திட்டவருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகளாவார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் ஷேக் ஹசினா பதவி வகித்து வருகிறார்.

    மற்றொரு பெண் அரசியல் தலைவரான கலிதா ஜியா, வங்காளதேசம் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் மனைவியாவார்.

    வங்காளதேசம் தேசியவாத கட்சியின் தலைவராகவும், அந்நாட்டின் ராணுவ தளபதியாகவும் இருந்த ஜியாவுர் ரஹ்மான் கடந்த 1981-ம் ஆண்டு கொல்லப்பட்ட பின்னர் கலிதா ஜியா தீவிர அரசியலில் குதித்தார்.

    இந்நிலையில், 21-8-2004 அன்று ஆண்டு கலிதா ஜியா பிரதமராக பதவி வகித்தபோது எதிர்க்கட்சியான அவாமி லீக் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியின்போது எதிர்க்கட்சி தலைவர் ஷேக் ஹசினாவை குறிவைத்து நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜில்லுர் ரஹ்மானின் மனைவியும் அவாமி லீக் கட்சியின் மகளிர் அணி தலைவியுமான ஐவி ரஹ்மான் உள்பட 24 பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

    இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக ஷேக் ஹசினா காயங்களுடன் உயிர் தப்பினார். எனினும், அவரது காதுகளில் கேட்கும் திறன் பறிபோனது.

    இச்சம்பவம் தொடர்பாக அந்நாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், முன்னாள் உள்துறை மந்திரி லுத்ஃபோஸ்மான் பாபர் உள்ளிட்ட 49 பேர் மீது டாக்கா விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.


    தாரிக் ரஹ்மான்

    இவர்களில் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தற்போது லண்டன் நகரில் வாழ்ந்து வருகிறார். இவ்வழக்கில் அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஹர்க்கத்துல் ஜிஹாத் அல் இஸ்லாமி என்னும் பயங்கரவாத அமைப்பினரின் துணையுடன் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்றதாக விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில், இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஷாஹெத் நூருதீன்,  முன்னாள் உள்துறை மந்திரி லுத்ஃபோஸ்மான் பாபர் உள்பட 19 பேருக்கு மரண தண்டனையும், முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் உள்பட 19 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.  #KhaledaZia #Hasina #GrenadeAttack

    மனைவியை கொன்ற வழக்கில் பிரபல டிவி தொகுப்பார் சுஹைப் இல்யாசிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை டெல்லி ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. #SuhaibIlyasi
    டெல்லி:

    ‘இந்தியாவின் மோஸ்ட் வாண்டட்’ என்ற பெயரில் 1998-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மிகுந்த பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சியை இயக்கி தயாரித்தவர் சுஹைப் இல்யாசி. 2000-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கிழக்கு டெல்லியில் உள்ள சுஹைப் இல்யாசியின் வீட்டில் அவரது மனைவி அஞ்சு இல்யாசி கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

    தனக்கும் தன் மனைவிக்கு சண்டை ஏற்பட்டது, அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சுஹைப் போலீசில் கூறியிருந்தார். ஆனால், தனது மகளை சுஹைப்தான் கொன்று விட்டதாக அஞ்சுவின் தாயார் புகாரளித்தார். இதனையடுத்து, சுஹைப்பை கைது செய்த போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.

    17 ஆண்டுகளாக நடந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை நீதிமன்றம் சுஹைப்புக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டிருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி ஐகோர்ட் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. 
    ×