search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of tipper lorry"

    • பவானி போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • டிப்பர் லாரியில் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

    பவானி:

    பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் பவானி சப்-இன்ஸ்பெ க்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொ ண்டனர். அப்போது ஈரோடு மெயின் ரோடு செல்லியாண்டியம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்ட னர்.

    அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொ ண்டனர். டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் லாரி டிரைவர் தளவாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜை (40) கைது செய்தனர்.

    மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அந்தியூரை சேர்ந்த லாரி உரிமையாளர் ரமேஷ் மற்றும் இடத்தின் உரிமை யாளர் பெரியசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  

    • தாரமங்கலம் பகுதியில் செம்மண் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், உரிய சீட்டு இல்லாமல் செம்மண் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் செம்மண் கடத்துவதாக கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சேலம் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறை தனி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் தாரமங்கலம்-சங்ககிரி நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்ததில், உரிய சீட்டு இல்லாமல் செம்மண் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியை ஓட்டி வந்த நங்கவள்ளி எல்லகுட்டையூர் பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 48) மற்றும் அதன் உரிமையாளர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×