அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து சென்ற டிப்பர் லாரி பறிமுதல்

பவானி போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.டிப்பர் லாரியில் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரி.
பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரி.
Published on

பவானி:

பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் பவானி சப்-இன்ஸ்பெ க்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணி மேற்கொ ண்டனர். அப்போது ஈரோடு மெயின் ரோடு செல்லியாண்டியம்மன் கோவில் ஆர்ச் பகுதியில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்ட னர்.

அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரி ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொ ண்டனர். டிப்பர் லாரியில் 3 யூனிட் கிராவல் மண் அனுமதியின்றி விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து போலீசார் லாரி டிரைவர் தளவாய்பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜை (40) கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அந்தியூரை சேர்ந்த லாரி உரிமையாளர் ரமேஷ் மற்றும் இடத்தின் உரிமை யாளர் பெரியசாமி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com