search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sarashwathi Temple"

    • அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.
    • தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்னும் ஊர் அருகே கூத்தனூர் என்னும் கிராமத்தில்

    அரசலாறு ஆற்றங்கரையில் சரஸ்வதிக்கு கோவில் உள்ளது.

    இந்த ஆலயத்தில் சரஸ்வதி தேவி நான்கு திருக்கரங்களுடனும், அருள் ஞானமுத்திரை ஆகியவற்றுடனும்

    தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.

    இங்கு சரஸ்வதி பூஜை நாளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

    அந்நாளில் பூஜை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    கூத்தனூரில் ஆரம்பித்து ருத்ர கங்கை வரையிலான சுமார் இரண்டரை கிலோ மீட்டர் வரை வியாபித்துள்ள

    அரசலாற்றுக் கரையில் தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியங்கள் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

    இங்கு தர்ப்பணம் செய்யவும், குழந்தைகள் கல்வி மேன்மைக்கு வழிபாடு செய்யவும்,

    அவரவர் பாப கர்ம வினையிலிருந்து விடுபடவும் திரிவேணி சங்கம நீராடலுக்கும்,

    கணவன் மனைவி பிரிவிலிருந்து மீளவும் இது மிகச்சிறந்த பிராத்தனைத்தலம் என்று தலபுராணம் கூறுகிறது.

    மேலும் கம்பர் காலத்தில் அவைப்புலவர்களில் ஒருவராக இருந்த ஒட்டக்கூத்தர் கட்டிய கோவில் இது எனவும்

    இக்காரணம் தொட்டே இது கூத்தனுர் என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுவதுண்டு.

    இங்கு குடியிருக்கும் சரஸ்வதி தேவி பேச முடியாதவரையும் பேச வைக்கும் அருள் உள்ளம் கொண்டவள்.

    வாக்கு வன்மை யும் காவியம் இயற்றும், புலமையும் தருபவள்.

    நவராத்திரியின் போது பக்தர்கள் அம்மனைத் தொட்டு மலர்களால் அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    ×