என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem News: Bride"

    • ஆடிப்பண்டிகைக்கு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோனிஷா வீட்டிற்கு திரும்பினார்.
    • பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலு வயது (25), கோழிப்பண்ணை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த மோனிஷா (25) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஆடிப்பண்டிகைக்கு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு மோனிஷா வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

    இந்தநிலையில் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் மோனிஷா நேற்று பிணமாக மிதந்தார். தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் விரைந்து சென்று மோனிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று பிரேத பரிசோதனைக்கு பின் அ வரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே மோனிஷாவின் தாய் லதா வாழப்பாடி போலீசில் புகார் கொடுத்தார். அதில் மோனிஷாவுக்கு உடல் நலம் சரியில்லாத நிலையில் அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்ைச அளித்து வந்தோம், இந்த நிலையில் அவர் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார் என்று கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த சில நாட்களாக மோனிஷா மன உளைச்சலில் இருந்ததாகவும் இதனால், கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சிங்கார வேலு மற்றும் அவரது உறவினர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே திருமணம் ஆகி 45 நாட்களுக்குள் மோனிஷா தற்கொலை செய்து கொண்டதால் சேலம் ஆர்.டி.ஓ., கணவர் சிங்காரவேல் மற்றும் அவரது பெற்றோரிடமும் இன்று விசாரணை நடத்துகிறார். அவர் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×