search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salem chennai train robbery"

    சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலில் ரூ.5.70 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதான மேலும் 5 பேர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    சேலம் நாமக்கல் பகுதியை சேர்ந்த வங்கிகளில் இருந்து பழைய கிழிந்த ரூபாய் நோட்டுகள் சேகரிக்கப்பட்டன. இப்படி சேகரிக்கப்பட்ட ரூ.342 கோடி பணம் 226 அட்டை பெட்டிகளில் பாதுகாப்பாக அடுக்கப்பட்டு ஒரு ரெயில் பெட்டியில் வைக்கப்பட்டது. இந்த பெட்டியை சீல் வைத்து அதன் வெளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த ரெயிலின் 19 பெட்டிகளில் பயணிகளும் பயணம் செய்தனர்.

    இப்படி பயணிகளோடு வந்த ரெயிலில் பலத்த பாதுகாப்பையும் மீறி 4 பெட்டிகளை உடைத்து கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் துப்பு துலங்கியது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், மத்திய பிரதேச மாநில கொள்ளையர்களே இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    கோப்புப்படம்

    இது தொடர்பாக கடந்த 12-ந்தேதி தினேஷ், ரோகன் பார்பி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் ரெயில் கொள்ளை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோகர்சிங் என்ற கொள்ளையன் உள்பட 5 பேர் மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அங்கு வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 5 கொள்ளையர்களையும் அம்மாநில கோர்ட்டில் அனுமதி பெற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    காலை 11.30 மணி அளவில் மோகர்சிங் உள்ளிட்ட 5 பேரும் சைதாப்பேட்டை 11-வது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் பிறகு புழல் சிறையில் அடைக்கப்படும் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    மோகர்சிங் கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் உள்ள மற்ற கொள்ளையர்கள் பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரெயில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலையில் சி.பி.சி.ஐ.டி உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நிருபர்கள் போனில் தொடர்பு கொண்டு பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டனர். ஆனால் யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை. இதில் என்ன ரகசியம் என்பது அவர்களுக்கே வெளிச்சமாகும்.  #ChennaiTrainRobbery #RBIMoney
    ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரெயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது. பின்னர் பணம் இருந்த பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்தபோது, மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்த கொள்ளை தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை என்றும், சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அல்லது எழும்பூர் ரெயில்நிலையத்தில் தான் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

    ஓடும் ரெயிலில் ஏறி கொள்ளையடித்தால் கைரேகை பல இடங்களில் பதிவாகி இருக்கும். ஆனால் ரெயில் பெட்டியில் ஒரு சில பகுதிகளில் தான் கைரேகை இருந்தது. இதுதவிர ஓடும் பெட்டியில் ஏறினாலோ, கீழே இறங்கினாலோ கால் தடம் மற்றும் கைரேகைகள் பல இடங்களில் நிச்சயம் பதிந்து இருக்கும். ஆனால் கால் தடம், கை ரேகை பல இடங்களில் இல்லை.

    ஒரு சில கைரேகை மட்டுமே உள்ளதால் வங்கி பணம் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கவில்லை என்றும், ரெயில் நின்று இருக்கும் போது தான் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீட்டர் தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று நாசா படங்களை அனுப்பியது. நாசா படங்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  

    இந்த நிலையில்,  ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை  சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.  

    சின்ன சேலத்திற்கும், விருதாசலத்திற்கும் இடையே ரயில் பெட்டி மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்ததாக கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.  கொள்ளையடித்த பழைய ரூபாய் நோட்டுகளை லுங்கியில் சுற்றிக்கொண்டு 2 கொள்ளையர்கள் தப்பியுள்ளனர். ரயில் விருதாசலம் வந்தபோது பணக்கட்டுகளை மற்ற கூட்டாளிகளிடம் தந்துள்ளனர்.  ரயில் நிலையத்தில் இறங்கி காத்திருந்த மேலும் ஐவருடன் மத்திய பிரதேசம் தப்பி சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். #SalemChennaiTrainRobbery #ChennaiTrainRobbery #RBIMoney
    சேலம்-சென்னை ரெயில் கொள்ளை தொடர்பாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கி உள்ளது. #ChennaiTrainRobbery #RBIMoney
    சென்னை:

    சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.323 கோடி பழைய, கிழிந்த ரூபாய் நோட்டுகளை சேகரித்து ரெயில் மூலம் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட ரெயில் மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைந்தது. பின்னர் பணம் இருந்த பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பெட்டியை திறந்து பார்த்தபோது, மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்த கொள்ளை தொடர்பாக சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை என்றும், சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அல்லது எழும்பூர் ரெயில்நிலையத்தில் தான் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்தது.

    ஓடும் ரெயிலில் ஏறி கொள்ளையடித்தால் கைரேகை பல இடங்களில் பதிவாகி இருக்கும். ஆனால் ரெயில் பெட்டியில் ஒரு சில பகுதிகளில் தான் கைரேகை இருந்தது. இதுதவிர ஓடும் பெட்டியில் ஏறினாலோ, கீழே இறங்கினாலோ கால் தடம் மற்றும் கைரேகைகள் பல இடங்களில் நிச்சயம் பதிந்து இருக்கும். ஆனால் கால் தடம், கை ரேகை பல இடங்களில் இல்லை.

    ஒரு சில கைரேகை மட்டுமே உள்ளதால் வங்கி பணம் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கவில்லை என்றும், ரெயில் நின்று இருக்கும் போது தான் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா அளித்த தகவலின் அடிப்படையில், இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீட்டர் தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக நாசா அனுப்பியது. மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று நாசா படங்களை அனுப்பியது.

    நாசா படங்களின் அடிப்படையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  11 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் மத்திய பிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்தவர்கள் என முதல் கட்ட  தகவல் வெளியாகியுள்ளது. #ChennaiTrainRobbery #RBIMoney
    ×