என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sahitya academy award"

    • இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழில் 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 24 மொழிகளில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வெளியான சிறுகதை, கவிதை, நாடகம், கட்டுரை ஆகியவற்றுக்கு பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பால புரஸ்கார் விருது 'ஒற்றைச் சிறகு ஓவியா' என்ற சிறார் கதைகளுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் விருது வென்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் 'ஒற்றைச் சிறகு ஓவியா' நூலுக்காக சாகித்ய அகாடமி-யின் பால புரஸ்கார் விருது பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என @tnschoolsedu-இன் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் திரு. விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

    அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் 'கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்" சிறுகதைத் தொகுப்புக்காக #YuvaPuraskar பெறத் தேர்வாகி இருக்கும் திரு. லட்சுமிஹர் அவர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களை தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பினை பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் நமது #DravidianModel அரசின் சார்பில் வாழ்த்துகிறேன் என அறிக்கையில் கூறினார்.

    இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் லெனின் தங்கப்பா புதுச்சேரியில் இன்று காலமானார். #MLThangappa #SahityaAcademyAward
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாவட்டம் அவ்வை நகரில் வசித்து வருபவர் தமிழ் எழுத்தாளர் லெனின் தங்கப்பா (84). இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் குறும்பலாபேரி. இவர் தாகூர் கலைக்கல்லூரி மற்றும் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

    இவர் 50-க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். மேலும், பாரதியார், அரவிந்தர் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

    இவர் எழுதிய, சோளக்கொல்லை பொம்மை என்ற நூலுக்கு 2010-ம் ஆண்டுக்கான குழந்தை இலக்கிய பிரிவில் சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MLThangappa #SahityaAcademyAward
    ×