search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rice Crackers"

    மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று எள்ளுத்தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - கால்கிலோ
    உளுந்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    வெல்லம் - 150 கிராம் (தூளாக்கவும்)
    வெள்ளை எள் - 100 கிராம்
    நல்லெண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    பச்சரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊறவைத்து, மாவு தயாரித்துக்கொள்ளவும்.

    உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து பொடித்துக்கொள்ளவும்.

    அவற்றுடன் எள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சூடானதும் வெல்லத்தை கொட்டி பாகு காய்ச்சிக்கொள்ளவும்.

    பின்னர் பாகுவை அரிசி மாவு கலவையில் ஊற்றி கிளறவும்.

    இந்த மாவை தட்டைகளாக தட்டி உலற வைக்கவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தட்டைகளை போட்டு பொரித்தெடுக்கலாம்.

    சூப்பரான எள்ளுத்தட்டை ரெடி.

    இந்த தட்டையை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுவைமிகுந்த மொறுமொறுப்பான தட்டை வகைகளை வீட்டிலேயே தயார் செய்து டீ, காபியுடன் சுவைக்கலாம். இன்று அரிசி தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அ‌ரி‌சி - 2 கப்
    ப‌ச்சை ‌மிளகா‌ய் - 3
    பெரு‌ங்காய‌த்தூள் - ‌ சி‌றிதளவு
    எ‌ள் - 1 டீஸ்பூன்
    தே‌ங்கா‌ய் துருவ‌ல் - கா‌ல் க‌ப்
    வெ‌ண்ணெ‌ய் - சிறிதளவு
    உ‌ப்பு, எ‌ண்ணெ‌ய் - தேவைக்கு



    செய்முறை:

    அரிசியை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, பின்னர் நிழலில் உலர்த்தி மாவாக இடித்துக்கொள்ளவும்.

    பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    வாணலியை சூடாக்கி அதில் மாவை கொட்டி லேசாக வறுத்தெடுக்கவும்.

    அதனுடன் பெருங்காயத்தூள், எள், தேங்காய் துருவல், வெண்ணெய், பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து கிளறிக்கொள்ளவும்.

    பின்பு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி தட்டை மாவு பதத்தில் பிசைந்து தட்டைகளாக தட்டிக்கொள்ளவும்.

    துணியில் தட்டைகளை பரப்பி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    சூப்பரான அரிசி தட்டை ரெடி.

    இதை காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து 10 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×