என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rescuer"

    • தீபக் மஹாவர் நாகப்பாம்பை கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார்.
    • கழுத்தில் பாம்புடன், மகனை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தீபக் மஹாவரின் கையில் அந்த பாம்பு கடித்துவிட்டது.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் குணால் மாவட்டத்தை சேர்ந்தவர் தீபக் மஹாவர் (வயது 42). பாம்புபிடி வீரரான இவர், பல்வேறு பகுதிகளில் பாம்புகளை பிடித்த அனுபவம் உள்ளவர்.

    இந்தநிலையில் பர்பத்புரா கிராமத்தில் ஒரு கல்வி நிறுவனத்தில் கொடிய விஷமுள்ள பாம்பு பதுங்கி இருப்பதாகவும், அதை பிடிக்குமாறும் தீபக் மஹாவருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அங்கு சென்ற அவர், அந்த விஷப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

    அப்போது பள்ளியில் படிக்கும் அவருடைய மகனை அழைத்துவருமாறு அவருக்கு வீட்டில் இருந்து போன் வந்தது. இதையடுத்து கொடிய விஷமுள்ள அந்த நாகப்பாம்பை அவர் தனது கழுத்தில் போட்டுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மகன் படிக்கும் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். வழியில் தனது கழுத்தில் பாம்பு கிடப்பதை செல்போனில் வீடியோ எடுத்து அதனை 'ரீல்ஸ்' ஆக வெளியிட்டார்.

    கழுத்தில் பாம்புடன், மகனை அழைத்துக்கொண்டு வரும் வழியில் தீபக் மஹாவரின் கையில் அந்த பாம்பு கடித்துவிட்டது. இதில் அவரது உடலில் விஷம் ஏறியது. அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தீபக் மஹாவர் பரிதாபமாக செத்தார்.

    இந்தநிலையில் தீபக் மஹாவர், விஷப்பாம்பை கழுத்தில்போட்டு சுற்றிய ரீல்ஸ் வெளியாகி வைரலாகியுள்ளது.

    நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை வீரர்

    புதச்சேரி:

    காரைக்கால் மாவட்ட காவல் துறையில், ஊர்க்காவல்படை வீரராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ்கண்ணா. இவர் நேற்று முன்தினம், காரைக்கால் காத்தா பிள்ளை கோடி சிக்னலில் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ரூ. 75 ஆயிரம் மதிப்புடைய தங்க செயின் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.

    இதனை கண்டெடுத்த ராஜேஷ் கண்ணா, உரிய விசாரணை மற்றும் காவல்துறை தலைமையகம் உத்தரவின் பேரில், உரியவரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் ராஜேஷ் கண்ணாவை பொன்னாடை போர்த்தி பாராட்டினார். விபரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் ராஜேஷ் கண்ணாவை பாராட்டி வருகின்றனர். இந்த விவரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ×