search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rashabh Pant"

    ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் இடம்பெறாததை சுட்டிக்காட்டி ஆஸ்திரேலியா அணி கேப்டன் டிம் பெய்ன் கிண்டல் செய்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் பேட் கம்மின்ஸின் அபார பந்து வீச்சால் இந்தியாவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்னாக இருக்கும்போது 6-வது விக்கெட்டுக்கு மயாங்க் அகர்வால் உடன் ரிஷப் பந்து ஜோடி சேர்ந்தார்

    ரிஷப் பந்த் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பரும், கேப்டனும் ஆன டிம் பெய்ன் அவரை சீண்டினார். டிம் பெய்ன் சீண்டியது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது.



    ரிஷப் பந்த் பற்றி டிம் பெய்ன் கூறுகையில் ‘‘தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் எம்எஸ் டோனி இடம்பிடித்துள்ளார். இதனால் நீங்கள் பிக்பாஷ் டி20 லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடலாம். நதிக்கரையோரம் அமைந்துள்ள மிகவும் அழகான நகரம்’’ என்றார்.

    முதல் இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்யும்போது ஐபிஎல் தொடர் குறித்து ரோகித் சர்மாவை கிண்டல் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு 145 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ். #IPL2018 #DDvMI
    ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி டேர்டெவில்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பிரித்வி ஷா, மேக்ஸ்வெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 12 ரன்னிலும், மேக்ஸ்வெல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.



    அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் 44 பந்தில் தலா 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 64 ரன்கள் குவித்தார். 5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், அபிஷேக் ஷர்மா முறையே 43 ரன்களும், 15 ரன்களும் அடிக்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர் முடிவில் 174 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.
    ×