search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radha Mohan Singh"

    காட்டு விலங்குகள் தாக்குதலால் சேதம் அடையும் பயிர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #WildAnimalAttack #PradhanMantriFasalBimaYojna #RadhaMohanSingh
    புதுடெல்லி:

    இயற்கை சீற்றங்களால் சேதம் அடையும் பயிர்களுக்கு ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற மத்திய அரசு திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. காட்டு விலங்குகள் தாக்குதலால் சேதம் அடையும் பயிர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று பல்வேறு எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில், காட்டு விலங்குகள் தாக்குதலால் சேதம் அடையும் பயிர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, ஒன்றிரண்டு மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் இது அமல்படுத்தப்படும் என்று மத்திய வேளாண் மந்திரி ராதா மோகன்சிங் கூறினார். சில தோட்டக்கலை பயிர்களையும் சோதனை அடிப்படையில் இத்திட்டவரம்புக்குள் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். #WildAnimalAttack #PradhanMantriFasalBimaYojna #RadhaMohanSingh
    ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங் கூறியுள்ளார். #AgricultureMinister #RadhaMohanSingh #Farmersprotest #mediaattention

    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி பல கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட 6 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

    இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் விவசாயிகள் 10 நாட்கள் போராட்டத்தை கடந்த 1-ம் தேதி தொடங்கினர். இதனால் வடமாநிலங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. 

    இதுகுறித்து பேசிய மத்திய விவசாயத்துறை மந்திரி ராதா மோகன்சிங், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவுமே விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.



    அவர் கூறுகையில், மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இதனை விவசாயிகள் உணராமல் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரம் தேடவும் போராட்டம் நடத்துகின்றனர், என கூறினார். மத்திய விவசாயத்துறை மந்திரி இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #AgricultureMinister #RadhaMohanSingh #Farmersprotest #mediaattention
    ×