என் மலர்

  நீங்கள் தேடியது "pulwama martyrs"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு, கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
  தூத்துக்குடி:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
   
  இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.  புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களில் தூத்துக்குடி சவலாப்பேரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியனும் ஒருவர்.

  இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி இன்று தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்றார். அங்குள்ள சவலாப்பேரி கிராமத்துக்கு சென்ற கனிமொழி, சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறினார். #PulwamaAttack #Kanimozhi #DMK #Subramanian #CRPF
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #Vedanta
  புதுடெல்லி:

  ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
   
  இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.

  இந்நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும், பலியான வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவையும் ஏற்றுக் கொள்கிறோம் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.  இதேபோல், புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்த மயி அறிவித்துள்ளார்.

  ஏற்கனவே, நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வீரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #PulwamaVictims #CRPFSoldiers #Vedanta
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் உடல் பாகங்கள் என்று சமூக வலைத்தளங்களில் போலியாக வெளியிடப்படும் புகைப்படங்கள், வீடியோ தொடர்பாக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. #PulwamaAttack #fakepictures #Pulwamamartyrs #CRPFAdvisory
  புதுடெல்லி:

  புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் 40  சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பல செய்திகள் பலப்பல வதந்திகளும் வெளியாகி வருகின்றன.

  பலியான வீரர்களின் குரூப் போட்டோ, கடைசி செல்பி மற்றும் கொல்லப்பட்டவர்களின் சிதைந்துபோன உடல் பாகங்கள் என சமூக வலைத்தளங்களில் ஏராளமான புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

  மேலும், சினிமா காட்சிகளை வெட்டி, ஒட்டவைத்து பஸ் மீது கார் மோதி வெடிப்பது போன்ற வீடியோக்களை சிலர் வெளியிட்டு இப்படித்தான் புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டது என இணையங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

  இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் உடல் பாகங்கள் என்று சமூக வலைத்தளங்களின் போலியாக வெளியிடப்படும் புகைப்படங்கள், வீடியோ தொடர்பாக டெல்லியில் உள்ள சி.ஆர்.பி.எப். எனப்படும் துணை ராணுவப்படை தலைமை அலுவலகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.  நாங்கள் எல்லாம் ஒன்றிணைந்து இருக்கும் நிலையில் எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சில சமூகவிரோதிகள் இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

  அப்படிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தயவுசெய்து பதிவேற்றம், லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டாம். அப்படி காண நேரிட்டால் webpro@crpf.gov.in என புகார் அளிக்கவும் என சி.ஆர்.பி.எப். தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #PulwamaAttack #fakepictures #Pulwamamartyrs #CRPFAdvisory

  ×