என் மலர்
நீங்கள் தேடியது "Puducherry nominated MLAs"
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களது நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக் கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நியமனம் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இதையடுத்து கடந்த மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் நியமனம் எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் தீர்ப்பு வந்த பிறகே நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக இறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பா.ஜனதா சார்பாக ஆஜரான வக்கீல்கள் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் எதுவும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அடையாள அட்டை கூட தேதி குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்து நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய அனைத்து அதிகாரத்தையும் சலுகைகளையும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதோடு அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். #PuducherryAssembly #NominatedMLAs
புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பரிந்துரையின்றி பா.ஜனதா மாநில தலைவர் சாமி நாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.
மத்திய அரசு நேரடியாக நியமித்த எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்து விட்டார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் நியமனம் செல்லும் என அதிரடியாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
அதோடு விசாரணையின்போது நியமன எம்.எல்.ஏ.க்களை சட்ட மன்றத்துக்குள் செயல்பட அனுமதிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்தை ஏற்ற சபாநாயகர் வைத்திலிங்கம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் கடந்த 2-ந் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க அனுமதித்தார். உச்சநீதிமன்றத்தின் எதிர் பார்ப்புக்கு இணங்க நடப்பு கூட்டத்தொடரில் மட்டும் நியமன எம்.எல்.ஏ.க்களை அனுமதிப்பதாகவும், செப்டம்பர் 11-ந்தேதி வழக்கின் தீர்ப்புக்கு ஏற்ப இறுதி முடிவு எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.

அதே நேரத்தில், பா.ஜனதாவின் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அடையாள அட்டை, கார் பாஸ் போன்றவை அளிக்கப்பட்டு உள்ளது. இவை வருகிற 11-ந் தேதி வரை தகுதியுடையதாக அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் சம்பளம் வழங்க சட்டசபை செயலகம் பட்டியல் அனுப்பி உள்ளது.
இதில் பா.ஜனதாவின் நியமன எம்.எல்.ஏ.க்கள் பெயர் இடம்பெறவில்லை. எனவே, ஆகஸ்டு மாத சம்பளம் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைக்காது என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சட்டசபை செயலகத்தில் கேட்டபோது, நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு மீண்டும் வருகிற 11 -ந் தேதி விசாரணைக்கு வருகிறது. இறுதி தீர்ப்பு வந்தபிறகே சம்பளம், சலுகைகள் குறித்து முடிவு எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் சாமி நாதனிடம் கேட்டபோது, தற்போதைய நிலையில் சம்பளம் முக்கியமில்லை. ஏற்கனவே வருகை பதிவேடு மற்றும் சட்டசபை ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளோம்.
ஏற்கனவே கூறியபடி எம்.எல்.ஏ.க்களாக சட்டசபைக்குள் 3 பேரும் நுழைந்து விட்டோம். உச்ச நீதிமன்றமும் எங்களுக்கு நல்லதொரு தீர்ப்பை நிச்சயமாக வழங்கும் என கூறினார். #NominatedMLAs #PondicherryAssembly
புதுச்சேரி:
புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.
எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோருக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆனால், எம்.எல்.ஏ.க் களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார். அதோடு எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரஸ் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டது.
ஐகோர்ட்டு மத்திய அரசுக்கு புதுவை சட்ட சபைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.
இதனால் தங்களை சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நியமன எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்காததால் அவர்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு கவர்னர் கிரண்பேடி நிதி மசோதாவுக்கு அனுமதி அளித்தார்.
இதையடுத்து கடந்த 1-ந்தேதி கூடிய சட்டசபை கூட்டத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். நிதிமசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தராமன் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட சபையில் வாக்களிக்க உரிமை இல்லை என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் வைத்திலிங்கம் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றினார்.
மேலும் சுப்ரீம் கோர்ட்டின் எதிர்பார்ப்புக்கு இணங்கி 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சபைக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்புக்கு பிறகு நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் சபை நிகழ்வில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள், உரிமைகள் வழங்கப்படாது என்பது தெரிய வந்துள்ளது.
வழக்கமாக நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி, அரசு விழாக்களுக்கு அழைப்பு, அரசின் நலத்திட்டங்களை பெற பரிந்துரைக்கும் உரிமை, சட்டசபையில் அறை ஒதுக்கீடு என தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களுக்கு உரிய அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.
ஆனால், பா.ஜனதாவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகே அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் நியமன எம்.எல். ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்காது. அரசு விழாக்களுக்கு அழைப்பு அனுப்பப்படாது. மக்கள் நலத்திட்டங்களுக்கு பரிந்துரை செய்ய முடியாது என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டசபை செயலகம் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தலும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ், தி.மு.க. இடையில் கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஒரு நியமன எம்.எல்.ஏ. பதவியை தி.மு.க.வுக்கு அளிப்பதாக காங்கிரஸ் உறுதி அளித்திருந்தது. தி.மு.க.வில் இந்த பதவியை பெற பலரும் முயற்சித்து வந்தனர்.
இந்த நிலையில் பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதித்திருப்பது தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தங்களுக்கு வழங்குவதாக கூறிய தி.மு.க. நியமன எம்.எல்.ஏ. பதவியை காலத்தோடு வழங்கியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என தி.மு.க.வினர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நேரடியாக நியமித்தது. சபாநாயகர் இதனை ஏற்க மறுத்து, பதவிப்பிரமாணம் செய்யாததால், அவர்களுக்கு கவர்னர் கிரண்பேடியே பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.
ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து வருகிறார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது.
சென்னை ஐகோர்ட் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்காமல், இறுதி விசாரணையை ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மேலும், நியமன எம்எல்ஏக்கள் மூன்று பேரும் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்றும் உத்தரவிட்டு, வழக்கை மூன்று வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், பட்ஜெட் தொடரில் பங்கேற்பதற்காக 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் புதுவை சட்டசபைக்கு சென்றனர். ஆனால், அவர்களை சபை காவலர்கள் சட்டசபை வளாகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இப்போது சுப்ரீம் கோர்ட் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருப்பதால், 3 எம்எல்ஏக்களையும் சபைக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. #PuducherryNominatedMLAs






