search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Sirisena"

    இலங்கை பாராளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. #Rajapaksa

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங் கேவை கடந்த அக்டோபர் 26-ந் தேதி அதிபர் சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதற்கிடையே ராஜபக்சேவுக்கு போதிய எம்.பி.க்கள் ஆதரவு இல்லாததால் பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேனா உத்தரவிட்டார். அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. முடிவில் பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் என்றும், புதிய பிரதமராக ராஜபக்சேவை நியமித்தது செல்லாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இது அதிபர் சிறிசேனாவுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனவே ரணில் விக்ரமசிங் கேவை அவர் மீண்டும் பிரதமராக அறிவித்தார். அதே நேரத்தில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை எதிர் கட்சி தலைவராக்கினார்.

    இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு முதல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் போதிய உறுப்பினர் இல்லாத ராஜபக்சேவுக்கு அதிபர் சிறிசேனா எதிர்கட்சி தலைவர் பதவி வழங்க கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சி எம்.பி.க்கள் ராஜபக்சேவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி என்ற கட்சியை உருவாக்கியுள்ளனர். தற்போது அதன் தலைவராக சிறிசேனா இருக்கிறார்.

    அதன் அடிப்படையில் புதிய மந்திரி சபையில் 3 முக்கிய இலாக்காக்களை தன்வசம் வைத்துள்ளார். தற்போது, ராஜபக்சே கட்சியுடன், சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும் இணைந்து புதிய கூட்டணி உருவாகி இருப்பதால் அதிக உறுப்பினர்களை கொண்ட எதிர்கட்சி ஆகி விட்டது. எனவே ராஜபக்சேவை எதிர்கட்சி தலைவராக்கி இருப்பதாக சிறிசோன தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று பாராளுமன்றம் கூடியது. அதில் எதிர்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்சேவை சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணிக்கு எதிர்க் கட்சி அந்தஸ்து வழங்குவதாக அவர் விளக்கம் அளித்தார். #Rajapaksa

    இலங்கையில் கடந்த 51-நாட்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்து மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #RanilWickremesinghe #PrimeMinister

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் 26-ந்தேதி அதிபர் மைத்ரி பால சிறிசேனா நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதற்கிடையே ராஜபக்சேவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால் அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை அறிவித்தார். இதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாதது என அறிவித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கியது சட்ட விரோதம் என்றும் தீர்ப்பு அளித்தது.

    அதன் பின்னர் பாராளுமன்றத்தில் ராஜபக்சே மீது எதிர்க்கட்சிகள் 2 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வெற்றி பெற்றனர். இருந்தும் அவரை பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா நீக்க வில்லை. இந்த நிலையில் பிரதமர் பதவியில் ராஜபக்சே தொடர்ந்து நீடிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.

    இதனால் அதிபர் சிறிசேனாவுக்கும், ராஜபக்சேவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார்.

    அதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக சிறிசேனா அறிவித்தார்.

    பதவி ஏற்பு விழா இன்று நடைபெற்றது. அதற்காக ரணில் விக்ரமசிங்கே ஜனாதிபதி அலுவலகம் வந்தார். அவருடன் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த எம்.பி.க்களும், கட்சி உறுப்பினர்கள் ஏராளமானோரும் வந்து இருந்தனர். உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே சென்றனர்.

    காலை 11.16 மணியளவில் ரணில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கையில் கடந்த 51 நாட்களாக நீடித்த அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வந்தன.

    ரணில் விக்ரமசிங்கேவை தொடர்ந்து புதிய மந்திரிகள் நாளை (17-ந்தேதி) பதவி ஏற்கிறார்கள். 30 பேர் மந்திரிகளாக நியமிக்கப்படுகிறார்கள்.

    அவர்களில் 6 பேர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர்கள். இதன்மூலம் ரணில் விக்ரமசிங்கே கூட்டணி அரசு அமைக்கிறார். #RanilWickremesinghe #PrimeMinister

    இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு மனநிலை பாதித்துவிட்டதால் பைத்தியக்காரர் போல் நடந்து கொள்கிறார் என்று முன்னாள் தளபதி சரத்பொன்சேகா கூறி உள்ளார். #Sirisena #SarathFonseka
    கொழும்பு:

    இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் ராஜ பக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்தார்.

    ஆனால், ராஜபக்சேவால் பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியவில்லை. கோர்ட்டு அவர் பிரதமர் பதவியை தொடருவதற்கு தடை விதித்துள்ளது.

    இதனால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதமர் இல்லாமல் இலங்கையில் அரசியல் குழப்பம் நிலவுகிறது.

    இதில், அதிபர் சிறிசேனா எந்த முடிவும் எடுக்க முடியாமல் திணறி கொண்டு இருக்கிறார்.



    இது சம்பந்தமாக முன்னாள் ராணுவ தளபதியும், எம்.பி.யும் ஆன சரத் பொன்சேகா கூறியதாவது:-

    அதிபர் சிறிசேனா இரவில் ஒன்று பேசுகிறார். விடிந்ததும் வேறு ஒன்றை பேசுகிறார். அவருடைய மனநிலை பாதித்து விட்டது. பைத்தியக்காரர் போல் நடந்து கொள்கிறார்.

    அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிபர், அரசு தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகள் பதவி ஏற்பதற்கு முன்பு மனநிலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று விதிகள் இருக்கிறது.

    அதே போல் இலங்கையிலும் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் அதிபர் சிறிசேனா 2 வாரம் மனநல ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரலாம்.

    இதற்கு தேவை என்றால் சட்ட திருத்தங்களை கூட உருவாக்கலாம். சிறிசேனா தொடர்ந்து அரசியல் சாசன சட்டத்தை மீறி வருகிறார்.

    என்னை அதிபர் ஆக்கி இருந்தால் இது போன்று ஒரு போதும் நடந்து கொள்ள மாட்டேன். அரசியல் சட்டத்தை மீற மாட்டேன்.

    யாரோ எழுதி கொடுத்த புத்தகத்தை ஜனாதிபதி தாத்தா என்ற பெயரில் தனது பேத்தியை வைத்து வெளியிடுகிறார். அப்படிப்பட்ட நபர் தான் இங்கு அதிபராக இருக்கிறார்.

    இவ்வாறு பொன்சேகா கூறினார்.  #Sirisena #SarathFonseka
    இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கு அதிபர் சிறிசேனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. #RanilWickremesinghe #MaithripalaSirisena

    கொழும்பு:

    இலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.

    அதில் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும் இடம் பெற்றுள்ளன.

    இந்த 2 கட்சிகளுக்கு இடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இந்த நிலையில் இலங்கை சுதந்திரா கட்சியின் கொள்கை உருவாக்க மத்திய கூட்டம் நேற்று கொழும்பில் நடந்தது. அதில் தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

    சமீபத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும், தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் சந்தித்து பேசினர். அது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் ராஜபக்சே புதிய கட்சி தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவின் தலைமையில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு பதவிக்காலம் முடிவடைய உள்ள 2020-ம் ஆண்டுக்கு முன்பே தேர்தலை நடத்த வேண்டும் என விரும்புகிறார்.

    இக்கருத்தை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர் ஆதரித்தனர்.

    விக்ரமசிங்கேவின் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள 16 மந்திரிகள் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். ஏற்கனவே அதிபர் சிறிசேனாவுக்கு இதுகுறித்து கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

    இத்தகைய நெருக்கடி காரணமாக கூட்டணி அரசில் இருந்து இலங்கை சுதந்திரா கட்சி விலகும் முடிவை சிறிசேனா மேற் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே கடந்த ஏப்ரலில் இலங்கை சுதந்திரா கட்சியின் மந்திரிகள் சிலர் கூட்டணி அரசில் இருந்து பதவி விலகினர். பின்னர் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை தமிழ் மற்றும் முஸ்லிம் மைனாரிட்டி கட்சி எம்.பி.க்கள் உதவியுடன் ரனில் விக்ரமசிங்கே முறியடித்தார். #RanilWickremesinghe #MaithripalaSirisena

    ×