search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Polling agents meeting"

    • அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • தண்ணீர் வசதி செய்து கொடுப்பது உள்பட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    காங்கயம் : 

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள படியூரை அடுத்த தொட்டியபாளையத்தில் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்பட 7 மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சாவடி வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசுகிறார்.

    அதற்காக தொட்டியபாளையத்தில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அந்த இடத்தை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கூட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை வரவேற்பது, கூட்டத்துக்கான மேடை அமைப்பது, இருக்கை வசதி செய்வது, பந்தல் அமைப்பது, வாகன நிறுத்தம் அமைப்பது, கூட்டத்துக்கு வரும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் வசதி் செய்து கொடுப்பது உள்பட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார், செல்வராஜ் எம்.எல்.ஏ. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயராமகிருஷ்ணன், காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவானந்தன் மற்றும் தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், காங்கயம், வெள்ளகோவில் நகர, ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் போது கூட்டம் நடைபெறுவதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்த காங்கயம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவானந்தனுக்கு அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வாக்கு சாவடி முகவர் கூட்டம் வள்ளியூர் எம்.எஸ் மஹாலில் நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வாக்கு சாவடி முகவர் கூட்டம் வள்ளியூர் எம்.எஸ் மஹாலில் நடைபெற்றது. இதில் ராதாபுரம் தொகுதியியில் உள்ள 306 வாக்குசாவடி முகவர்களும் பங்குபெற்றனர். முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கபட்டது.

    நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, வள்ளியூர் யூனியன் தலைவர் ராஜா ஞானதிரவியம், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கிரகாம்பெல் , நெல்லை கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நம்பி மற்றும் நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×