என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pink bus"

    • இந்த பஸ்களின் கண்டக்‌டர் பெண்கள் ஆவார்கள்.
    • இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் 'பிங்க்' பஸ்கள் இயக்கத்தினையும், பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு 50 பொலீரோ வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மகளிர் விடியல் பயணம் திட்டம் (கட்டணமில்லா பஸ்) கடந்த மே 2021-ல் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று, 5 வழித்தடங்களில் ஒவ்வொரு வழித்தடத்திலும் 2 பஸ்கள் என மொத்தம் 10 பஸ்கள் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் பஸ்களின் இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மேலும், இந்த பஸ்களின் கண்டக்டர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

    இப்பஸ்கள், பிராட்வே முதல் எண்ணூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம், செங்குன்றம் முதல் வள்ளலார் நகர் பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளது.

    அதேபோல், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு பிரத்யேகமாக 50 பொலீரோ 4 சக்கர வாகனங்கள் மற்றும் 5 பிங்க் ஆட்டோ சேவையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • வெள்ளை நிற போர்டு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி.
    • இலவச பயண பேருந்துகளை எளிதில் அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் அறிமுகம்

    தமிழகத்தில் சாதாரண கட்டணம் கொண்ட அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னையில் வெள்ளை நிற போர்டு கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

    எனினும் அவசரத்தில் சில பெண்கள் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இந்த குழப்பத்தை தீர்க்கவும், இலவச பயணத்திற்கான பேருந்துகளை அடையாளம் காணவும் பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

    சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் பிங்க் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

    சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இந்த பேருந்துகளை தொடங்கி வைக்கிறார். மேலும் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் இருந்து பிற மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகள் இயக்கத்தையும் அவர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.

    ×