என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Periyar University"

    • கோபி தன்னை தாக்கியதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
    • ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின்பேரில் கோபி கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

    சேலம்:

    சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுபவர் கோபி (வயது 47).

    சேலம் சித்தனூரை சேர்ந்த இவர் கடந்த மே மாதம் 13-ந் தேதி முதல் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார். இவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார்.

    தன் கீழ் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் சேலம் சிவதாபுரம் அருகே உள்ள 27 வயது மாணவியை நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது வீட்டிற்கு ஆய்வு கட்டுரைகளை சரிபார்க்க வேண்டும் என கூறி அழைத்தார்.

    சந்தேகமடைந்த மாணவி முன் எச்சரிக்கையாக தன்னுடன் உறவினர்கள் சிலரை அழைத்து சென்றார். அவர்களை பதிவாளர் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி விட்டு மாணவி மட்டும் வீட்டிற்குள் சென்றார். மாணவியிடம் பதிவாளர் சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டபடி வீட்டை விட்டு வெளியேறினார்.

    வீட்டிற்கு வெளியில் இருந்த மாணவியின் உறவினர்கள் பதிவாளரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். காயமடைந்த பதிவாளர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கோபியை நேற்று மாலை கைது செய்தனர். அவர் மீது பாலியல் இச்சையை தூண்டும் வகையில் முத்தம் கொடுக்க முயற்சித்தல், தொடர்ந்து அத்தகைய முயற்சியில் ஈடுபடுதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கோபி தன்னை தாக்கியதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து அத்துமீறி நுழைதல், கையால் தாக்குதல், மரண பயத்தை உருவாக்குதல், ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவியின் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே கோபி மீது 7 மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்த நிலையில் அப்போது இருந்த துணைவேந்தர் சரியாக நடவடிக்கை எடுக்காமல் பணம் வாங்கி விட்டு அவரை தப்பிக்க விட்டதாக கூறப்படுகிறது.

    தற்போது ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின்பேரில் கோபி கையும் களவுமாக சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட கோபி நேற்று இரவு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட கோபியின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆகும். இவரது மனைவி கவிதா திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    • மாணவி அளித்த புகாரின் பேரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டார்.
    • பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் கோபி (50), என்பவர் புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இதனால் அவர், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்ததாக கூறப்படும் பாலியல் புகாரில், பொறுப்பு பதிவாளர்

    கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.

    விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

    மாணவியின் புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி மீது போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
    • வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம் பெறாதவாறு நடவடிக்கை.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து கேள்வி இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேள்வியால் மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருத்தம் தெரிவிப்பதாக பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இனிவரும் காலங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வினாக்கள் இடம் பெறாதவாறு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற வினாத்தாள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான்கு பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
    • சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் கண்டனம்

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வினாத்தாள் பிற பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாக விளக்கம்.
    • பெரியார் பல்கலைக்கழகத்திலேயே சாதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேள்வி கேட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    அந்த கேள்வியில் 4 பிரிவுகளை குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

    மேலும், வினாத்தாள் பிற பல்கலைக்கழகத்தில் கல்லூரி பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

    பெரியார் பல்கலைக்கழகத்திலேயே சாதி பற்றிய கேள்வி கேட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். #PeriyarUniversity #Banwarilalpurohit
    கருப்பூர்:

    சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் 18-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் தமிழக கவர்னரும், பல்கலைக் கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குவதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு இன்று காலை 11.30 மணிக்கு வந்தார்.

    அப்போது கவர்னருக்கு விமான நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தார். பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் பெரியார் பல்கலைக் கழகத்திற்கு வந்தார்.

    விழாவில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் பொ.குழந்தைவேல் ஆண்டறிக்கை வாசித்து, வரவேற்று பேசினார்.


    இதனை தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மற்றும் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறுப்பு கல்லூரி மாணவ- மாணவிகள் என 49 ஆயிரத்து 534 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீசன் பட்டமளிப்பு விழாவுரை நிகழ்த்தினார். இதில் கலெக்டர் ரோகிணி மற்றும் பதிவாளர் பேராசிரியர் கு.தங்கவேல் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.

    முன்னதாக கவர்னர் வருகையையொட்டி சேலம் மாநகர காவல் துறை சார்பில் கவர்னர் வரும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. #PeriyarUniversity #Banwarilalpurohit
    ×