search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மேலும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலம்
    X

    பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மேலும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலம்

    • கோபி தன்னை தாக்கியதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
    • ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின்பேரில் கோபி கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

    சேலம்:

    சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுபவர் கோபி (வயது 47).

    சேலம் சித்தனூரை சேர்ந்த இவர் கடந்த மே மாதம் 13-ந் தேதி முதல் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டார். இவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார்.

    தன் கீழ் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் சேலம் சிவதாபுரம் அருகே உள்ள 27 வயது மாணவியை நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் உள்ள தனது வீட்டிற்கு ஆய்வு கட்டுரைகளை சரிபார்க்க வேண்டும் என கூறி அழைத்தார்.

    சந்தேகமடைந்த மாணவி முன் எச்சரிக்கையாக தன்னுடன் உறவினர்கள் சிலரை அழைத்து சென்றார். அவர்களை பதிவாளர் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி விட்டு மாணவி மட்டும் வீட்டிற்குள் சென்றார். மாணவியிடம் பதிவாளர் சில்மிஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டபடி வீட்டை விட்டு வெளியேறினார்.

    வீட்டிற்கு வெளியில் இருந்த மாணவியின் உறவினர்கள் பதிவாளரிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். காயமடைந்த பதிவாளர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி கருப்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் கோபியை நேற்று மாலை கைது செய்தனர். அவர் மீது பாலியல் இச்சையை தூண்டும் வகையில் முத்தம் கொடுக்க முயற்சித்தல், தொடர்ந்து அத்தகைய முயற்சியில் ஈடுபடுதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் கோபி தன்னை தாக்கியதாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதையடுத்து அத்துமீறி நுழைதல், கையால் தாக்குதல், மரண பயத்தை உருவாக்குதல், ஆகிய பிரிவுகளின் கீழ் மாணவியின் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே கோபி மீது 7 மாணவிகள் பாலியல் தொல்லை புகார் கொடுத்த நிலையில் அப்போது இருந்த துணைவேந்தர் சரியாக நடவடிக்கை எடுக்காமல் பணம் வாங்கி விட்டு அவரை தப்பிக்க விட்டதாக கூறப்படுகிறது.

    தற்போது ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின்பேரில் கோபி கையும் களவுமாக சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட கோபி நேற்று இரவு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கைது செய்யப்பட்ட கோபியின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஆகும். இவரது மனைவி கவிதா திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    Next Story
    ×