மாணவி பாலியல் புகார் - சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது

மாணவி அளித்த புகாரின் பேரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டார்.பல்கலைக்கழக பதிவாளர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்பு பதிவாளர் கோபி
பொறுப்பு பதிவாளர் கோபி
Published on

சேலம்:

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக (பொறுப்பு) பேராசிரியர் கோபி (50), என்பவர் புதிதாக நியமனம் செய்யப்பட்டார். இதனால் அவர், பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்ததாக கூறப்படும் பாலியல் புகாரில், பொறுப்பு பதிவாளர்

கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.

மாணவியின் புகாரின் பேரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி மீது போலீசார் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com