என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's grievance redressal camp"

    • மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாளை தியாகராஜநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் பாளை தியாகராஜநகர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் கிராமப்புறம் ஜான் பிரிட்டோ மற்றும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறி யாளர்களும் கலந்து கொண்டனர்.

    • முகாமில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    • தி.மு.க. அரசு தான் மக்களை நேரடியாக தேடிச் சென்று பொது மக்களிடம் கோரிக்கை மனு வாங்கி கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குதிரைமொழி ஊராட்சிக்குட்பட்ட பாபநாசபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    முகாமில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி கலந்துகொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தி.மு.க. அரசு தான் மக்களை நேரடியாக தேடிச் சென்று பொது மக்களிடம் கோரிக்கை மனு வாங்கி கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக கூறினார். நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×