search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paraliament election"

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை சந்தித்து பேசுகிறார். அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு நடைபெறுகிறது. #DMK #MKStalin #SitaramYechury
    சென்னை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    ஏற்கனவே அவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

    கடந்த 9-ந்தேதி தி.மு.க. தலைவர் ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு பகுதியாக அவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை சந்தித்து பேசுகிறார். அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

    இந்த சந்திப்பின்போது 20 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜனதாவுக்கு எதிராக இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் 2 நாள் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்திலும் சீதாராம் யெச்சூரி பங்கேற்கிறார். #DMK #MKStalin #SitaramYechury
    ×