search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pamba"

    சபரிமலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இன்று காலை ஐயப்பனை தரிசிக்க வந்த இரண்டு பெண்கள் போலீசாரால் திருப்பி அனுப்பப்பட்டனர். #SabarimalaProtest #SabarimalaWomen
    கேரளா:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கேரள அரசும் முழு அளவில் உத்தரவிற்கு இணங்கியது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவில் நடை திறந்த நாள் முதல் அங்கு சென்ற இளம்பெண்கள் பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.



    ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ள கேரள அரசு, சபரிமலை செல்ல விரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க தொடங்கியது. இதன்  மூலம், பல பெண்கள் சபரிமலை சென்று பாதுகாப்புடன் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் , இன்று காலை மேலும் இரு பெண்கள் சபரிமலை செல்வதற்காக நிலக்கல் அடிவார முகாமை வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் கோவில் நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது அவர்களை போலீசார்  தடுத்து நிறுத்தினர். பம்பையில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டுள்ளதால் திரும்பி  செல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.  இதனையடுத்து இரண்டு பெண்களும் திரும்பிச் சென்றனர். #SabarimalaProtest #SabarimalaWomen 
    தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #KeralaHC
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறந்துள்ளது.

    சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்வார்கள். பல பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு நடைபயணமாகவும் செல்வார்கள்.

    தற்போது சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதன் காரணமாக பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் பம்பை வரை செல்ல முடியும்.



    வழக்கமாக தமிழக அரசு பஸ்களும் சபரிமலை சீசன் காலங்களில் பம்பை வரை சென்று வந்தன. இந்த ஆண்டு தமிழக அரசு பஸ்கள் நிலக்கல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் அது ஏற்கப்படவில்லை. இதனால் கேரள ஐகோர்ட்டில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. #KeralaHC


    மண்டல, மகர விளக்கு சீசனுக்கு முன்பாக பம்பை சீரமைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த கனமழை மற்றும் அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். வரலாறு காணாத பாதிப்பில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை.

    கேரளாவில் பெய்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் இருந்து கோவில்களும் தப்பவில்லை. ஏராளமான கோவில்கள் சேதமடைந்தன. திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 200 கோவில்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், பூஜைகள் நடைபெறவில்லை.

    சபரிமலை பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கிருந்த கட்டிடங்கள் சிதைந்து அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றின் குறுக்கே பக்தர்கள் நடந்து செல்லும் 2 பாலங்கள் பலமில்லாததால் வீழ்ந்து போனது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தங்கி ஓய்வெடுக்கும் ராமமூர்த்தி மண்டபம், 200 மீட்டர் நீளமுள்ள பிரதான நடை பந்தல், அன்னதான மண்டபம், கழிப்பறை கூடங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    தற்போது பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளது. இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தலைமையில் குழுவினர் பம்பையில் முகாமிட்டு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து திரு விதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் பம்பையில் நிருபர்களிடம் கூறியதாவது;-

    கேரளாவில் மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் சுமார் 200 கோவில்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. நீர் மட்டம் குறைந்த நிலையில் கோவிலை சுற்றி உள்ள சகதி மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சபரிமலை பம்பையில் ஏற்பட்ட சேதம் உள்பட தேவஸ்தானத்திற்கு ரூ.300 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இருந்த போதிலும், நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்பாக சபரிமலை பம்பை முற்றிலுமாக சீரமைக்கப்படும். மறு சீரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு பக்தர்கள் தாராளமாக நிதி உதவி வழங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods
    ×