என் மலர்

  செய்திகள்

  தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி - கேரள ஐகோர்ட்டு
  X

  தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி - கேரள ஐகோர்ட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #KeralaHC
  திருவனந்தபுரம்:

  சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறந்துள்ளது.

  சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்வார்கள். பல பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு நடைபயணமாகவும் செல்வார்கள்.

  தற்போது சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

  இதன் காரணமாக பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் பம்பை வரை செல்ல முடியும்.  வழக்கமாக தமிழக அரசு பஸ்களும் சபரிமலை சீசன் காலங்களில் பம்பை வரை சென்று வந்தன. இந்த ஆண்டு தமிழக அரசு பஸ்கள் நிலக்கல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் அது ஏற்கப்படவில்லை. இதனால் கேரள ஐகோர்ட்டில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. #KeralaHC


  Next Story
  ×