என் மலர்

  நீங்கள் தேடியது "TN buses"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #KeralaHC
  திருவனந்தபுரம்:

  சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை திறந்துள்ளது.

  சபரிமலைக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் கார், வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்வார்கள். பல பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு நடைபயணமாகவும் செல்வார்கள்.

  தற்போது சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

  இதன் காரணமாக பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல்லுடன் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து கேரள அரசு பஸ்களில் மட்டுமே பக்தர்கள் பம்பை வரை செல்ல முடியும்.  வழக்கமாக தமிழக அரசு பஸ்களும் சபரிமலை சீசன் காலங்களில் பம்பை வரை சென்று வந்தன. இந்த ஆண்டு தமிழக அரசு பஸ்கள் நிலக்கல் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. இதனை எதிர்த்து தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் அது ஏற்கப்படவில்லை. இதனால் கேரள ஐகோர்ட்டில் தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

  இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, தமிழக அரசு பஸ்களை பம்பை வரை இயக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. #KeralaHC


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. #BharathBandh #PetrolDieselPriceHike
  ஓசூர்:

  பாரத் பந்த் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு சென்ற அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் ஓசூரில் நிறுத்தப்பட்டன.

  இதே போல வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு வழக்கமாக இயக்கப்படும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் அனைத்தும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

  வழக்கமாக தமிழ்நாட்டில் இருந்து 250க்கும் மேற் பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் பெங்களூரு வரை இயக்கப்படும். இன்று இந்த பஸ்கள் அனைத்தும் ஓசூரிலேயே நிறுத்தப்பட்டன.

  இதே போல பெங்களூர் - ஓசூர் இடையே இன்று கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ்களும், தனியார் பஸ்களும் இயங்கவில்லை. இதனால் ஓசூரில் இருந்து பெங்களூருக்கு தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

  ஈரோடு மாவட்டத்தில் இருந்து சத்தியமங்கலம், பண்ணாரி, ஆசனூர் வழியாக கர்நாடகா செல்லும் தமிழக பஸ்களும் பந்த்தையொட்டி முன் எச்சரிக்கையாக இயக்கப்படவில்லை.

  அதேசமயம் இந்த பஸ்கள் இருமாநில எல்லையான புளிஞ்சூர் வரை சென்று திரும்பிவிடுகிறது. #BharathBandh #PetrolDieselPriceHike
  ×