என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palai Central Jail"

    • ராமஜெயம் கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை.
    • சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

    நெல்லை:

    தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் உடன் பிறந்த சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி தனது வீட்டிலிருந்து அதிகாலையில் நடைபயிற்சி செல்வதற்காக வெளியே சென்றார்.

    அப்போது மர்மநபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீசார் திணறினர். இதனால் சி.பி.ஐ. வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

    தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தமிழக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த ஜெயக்குமார் மாற்றப்பட்டார். இதனால் திருச்சி டி.ஐ.ஜி. வருண் குமார் மற்றும் தஞ்சாவூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோரை விசாரணை அதிகாரியாக ஐகோர்ட்டு நியமித்தது. தொடர்ந்து விசாரணை பல்வேறு கோணங்களில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் டி.ஐ.ஜி. வருண்குமார் தலைமையில் 2 டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்து திடீர் விசாரணை மேற்கொண்டனர். அங்கு கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் கொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சுடலைமுத்து என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    தண்டனை கைதியான சுடலை முத்து திருச்சி ராமஜெயத்தின் கொலை நடந்த காலகட்டத்தில் தொழிற் பயிற்சிக்காக திருச்சி சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் தன்னுடன் இருந்த மற்றொரு கைதியுடன் ராமஜெயம் வழக்கு தொடர்பாக செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் அந்த செல்போனை அப்போதே ஜெயிலராகவும் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையின் கண்காணிப்பாளராக இருப்பவருமான செந்தாமரை கண்ணன் பறிமுதல் செய்து உடைத்து விட்ட நிலையில் இன்று டி.ஐ.ஜி. தலைமையில் போலீசார் வந்து அவரிடம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமஜெயம் கொலை வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் அதில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 3 மணி நேரமாக விசாரணை நடைபெற்ற நிலையில் அந்த குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர்.

    இன்று நாங்குநேரியில் அவர்கள் தங்கி உள்ள நிலையில் 2-வது நாளாக மீண்டும் விசாரணை நடத்தப்படலாம் எனவும், தேவைப்பட்டால் கைதி சுடலைமுத்து திருச்சிக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படலாம் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
    • போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    நெல்லை:

    பாளை மத்திய சிறையில் விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

    இங்கு அடிக்கடி கைதிகளுக்குள் மோதல் நடப்பதும், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு கைதிகள் அனைவரும் சாப்பாடு வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது விசாரணை கைதியான நெல்லையை சேர்ந்த பேரின்பராஜ் என்பவருக்கும், சக கைதிகளான முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன், அத்தாள நல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜகோபால், தூத்துக்குடி டி.வி.கே. நகரை சேர்ந்த பரத் விக்னேஷ் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த ஜெயில் வார்டன்கள் உடனடியாக அங்கு வந்து அவர்களை பிடித்து சென்றனர்.

    இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) முனியாண்டி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பேரின்பராஜ் மற்றும் எதிர் தரப்பைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாளை மத்திய ஜெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    நெல்லை:

    பாளை மத்திய ஜெயிலில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு பீடி, சிரெட், செல்போன், கஞ்சா உள்ளிட தடைசெய்யப்பட்ட பொருட்கள், புழக்கத்தில் உள்ளதா? என்று போலீசார் அவ்வப்போது அறிவிப்பில்லாமல் தீடீர் சோதனை நடத்துவார்கள்.

    அதே போன்று இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலில் அதிரடி சோதனை நடத்த மாநகர போலீசார் கமி‌ஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் துணை கமி‌ஷனர் சுகுனாசிங் மேற்பார்வையில் உதவி கமிஷ்னர் விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமையா, காளியப்பன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை பாளை மத்திய ஜெயிலுக்கு சென்றனர்.

    அங்கு ஒவ்வொரு பிளாக்காக சென்று சோதனை நடத்த போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். பின்னர் காலை 6 மணி முதல் 7 .30 வரை அதிரடி சோதனை நடந்தது. கைதிகள் தங்கும் அறை, குளியல் அறை, கழிவறை மற்றும் மைதானத்தில் உள்ள சந்தேகப்படும் இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    அதை போல் முக்கிய கைதிகளிடமும். சோதனை நடத்தினார்கள் சுமார் 1 .30 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் ஜெயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவர்கள் ஆய்வு செய்து விட்டு திரும்பினர் பாளை ஜெயிலில் சோதனை நடந்த போது ஜெயிலின் வெளிப்புறமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. #tamilnews
    ×