search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan SC"

    பாகிஸ்தானில் மதஅவமதிப்பு குற்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கிறிஸ்தவப் பெண் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #PakistanSC #blasphemycase #Asiabeevi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு உள்ளூர்  நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் மேல்மூறையீடு செய்திருந்தார்.

    இந்த மனுவின்மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் 31-10-2018 அன்று தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    அவர் மீதான மத அவமதிப்பு குற்றச்சாட்டை அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து ஆசியா பீபியை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் அவர்மீது வேறெந்த வகையிலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்தனர்.

    மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியான இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    ஆசியா பீபி விடுதலை செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரி முஹம்மது சலாம் என்பவர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.



    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான அமர்வு இன்று இம்மனுவை தள்ளுபடி செய்தது.

    ஆசிபா பீபியை விடுதலை செய்வதற்கு முன்னதாக முஸ்லிம் மதத்தலைவர்களின் கருத்தையும் நீதிமன்றம் அறிந்திருக்க வேண்டும் என மனுதாரரின் வழக்கறிஞர் வாதாடினார்.

    இதுஎப்படி மத விவகாரம் ஆகும்? சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில்தான் இந்த கோர்ட் தீர்ப்பளித்தது. ஒருவர் குற்றவாளி அல்ல என்று தெரிந்தும் அவரை தண்டிக்க வேண்டும் என இஸ்லாம் மதம் கூறுகிறதா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்தார். #PakistanSC #blasphemycase #Asiabeevi
    பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். #PakistanSC
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த மியான் சாகிப் நிசார் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக ஆசிப் சயீத்கான் கோசா நியமிக்கப்பட்டார். இவர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் 26-வது தலைமை நீதிபதி ஆவார்.

    புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழா, இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடந்தது. புதிய தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசாவுக்கு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    இந்த விழாவில் பிரதமர் இம்ரான்கான், ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவத் பஜ்வா, விமானப்படை தளபதி ஆசிம் ஜாகீர், கடற்படை தளபதி ஜாபர் மக்மூத் அப்பாசி, பாராளுமன்ற செனட் சபை தலைவர் சாதிக் சஞ்ச்ரானி, பாராளுமன்ற மக்கள் சபை சபாநாயகர் ஆசாத் கைசர், மூத்த மந்திரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட வெளிநாட்டு பிரமுகர்களும் விழாவில் பங்கேற்றனர்.

    புதிய தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசாவின் பதவிக்காலம் 337 நாட்கள் ஆகும். இவர் இந்த ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி ஓய்வு பெறுவார்.

    பதவி ஏற்ற பின்னர் பொறுப்பு ஏற்பதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது தலைமை நீதிபதி ஆசிப் சயீத்கான் கோசாவுக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.  #PakistanSC
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீபுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து விடுதலை செய்த தீர்ப்புக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. #PakistanSC #SCdismissesdismisses #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
     
    இவ்வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் செரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார்.

    இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை பொறுப்புடைமை நீதிமன்றம் உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதாக தனது தீர்ப்பில் நீதிபதி சுட்டிக்காட்டி இருந்தார். இதையடுத்து, அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொறுப்புடைமை நீதிமன்றம் மேல் முறையீடு செய்தது. 

    இவ்வழக்கு நீதிபதி அசீப் சையத் கோசா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. முன்னர் இஸ்லாமாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்பில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதி பொறுப்புடைமை நீதிமன்றத்தின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 

    முன்னதாக, நவாஸ் செரீபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வந்தன. 

    இவ்வழக்குகளில் 24-12-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.  பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கில் இருந்து நவாஸ் செரீப்பை விடுவித்தும், அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அர்ஷத் முஹம்மத் மாலிக் உத்தரவிட்டார்.

    இந்த தீர்ப்பையடுத்து முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #PakistanSC #SCdismissesdismisses #NawazSharif  #NawazSharifgraftcase #NawazSharifsentence 
    பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்ணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்ததை எதிர்த்து பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. #PakistanSC #AsiaBibi #AsiaBibiacquitted
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.

    இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

    இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபியின் மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கு மேல்மூறையீடு செய்திருந்தார்.

    இந்த மனுவின்மீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

    அவர் மீதான மத அவமதிப்பு குற்றச்சாட்டை அரசுதரப்பு வழக்கறிஞர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க தவறியதால் இவ்வழக்கில் இருந்து ஆசியா பீபியை விடுதலை செய்வதாக அறிவித்த நீதிபதிகள் அவர்மீது வேறெந்த வகையிலும் போலீசார் நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்துள்ளனர்.

    மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியாகியுள்ள இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



    இந்த போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் கலவரமாகவும், வன்முறையாகவும் மாறாமல் இருக்க பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏராளமான போலீஸ் மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில்,  மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தியை தன்னால் நம்ப முடியவில்லை என லாகூர் சிறையில் இருந்தவாறு தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆசியா பீவி தெரிவித்துள்ளார்.

    ஆசியா பீபியின் விடுதலை செய்தி தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளதாக அவரது கணவர் ஆஷிக் மசிஹ் குறிப்பிட்டுள்ளார். கடவுளுக்கு நாங்கள் தெரிவித்து கொள்கிறோம். ஆசியா பீபி குற்றமற்றவர் என்பது எங்களுக்கு தெரியும். இந்த தீர்ப்பை அளித்த நீதிபதிகளுக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். #PakistanSC #AsiaBibi #AsiaBibiacquitted

    ×