search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ooty welfare assistance"

    • நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • திராவிட மாடல்” பாடல் நீலகிரி மாவட்டத்தில் துவக்கி வைக்கப்பட்டது.

    ஊட்டி,

    ஊட்டி நகர தி.மு.க. சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் நடைபெற்றது.தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ராசா நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக, தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள "திராவிட மாடல்" பாடலை கழக துணை பொதுச்செயலாளர் நீலகிரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.இதில் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், ராஜூ, பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது .

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது .

    மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் முகாமானது ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. இம்முகாமின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், சுய தொழில் தொடங்க கடனுதவி, பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகியவை குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது. மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    இம்முகாமின் மூலம் மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.2,02,000 மதிப்பில் நிதியுதவிக்கான காசோலைகளையும், மாற்றுத்திறனாளி நலவாரிய திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு இயற்கை மரணம் ஈமச்சடங்கு நிதியுதவி தொகை ரூ.17,000 த்திற்கான காசோலையினையும், கல்வி உதவித்தொகையாக தலா 1 மாணவனுக்கு ரூ.1,000 த்திற்கான காசோலையினையும் ஆக மொத்தம் ரூ.2,20,000/ மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையையும் கலெக்டர் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள செவிதிறன் குறைபாடுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் தங்கும் விடுதியில் சுகாதாரமான குடிநீர், உணவின் தரம் ஆகியவை குறித்து அவர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலகிருஷ்ணன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×