என் மலர்

  நீங்கள் தேடியது "online Business Companies"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆன்-லைன் வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் புகார் அளித்ததையொட்டி மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. #CentralGovernment #OnlineShopping
  புதுடெல்லி :

  ஆன்-லைன் வர்த்தகத்தில் சில பொருட்களுக்கு அதிகமான தள்ளுபடி வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாக உள்ளூர் வர்த்தகர்கள் பலர் அரசுக்கு புகார் செய்தனர்.

  இதன் எதிரொலியாக ‘பிளிப்கார்டு’, ‘அமேசான்’ போன்ற ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  அதன்படி, ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் பங்குதாரராக உள்ள கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. சில உற்பத்தி பொருட்களை ஆன்-லைனில் மட்டுமே விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் போடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.

  ஒரு கம்பெனி ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்களுடனோ, அந்த நிறுவனங்களின் இதர குழுக்களுடனோ பங்குதாரராக இருந்தால் அந்த கம்பெனியின் உற்பத்தி பொருட்களை ஆன்-லைன் வர்த்தகத்தில் விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு வருகிற பிப்ரவரி 1-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. #CentralGovernment #OnlineShopping

  ×