search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Note Ban"

  பண மதிப்பிழப்பு நடவடிக்கை, நல்லதொரு முடிவு என்று நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கூறினார். #RBI #UrjitPatel #ParliamentPanel
  புதுடெல்லி:

  பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு, நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றியபோது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக அறிவித்தார். ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் அன்று இரவு முதல் செல்லாது என அவர் அறிவித்தது, கருப்பு பண முதலைகள் முதல் சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

  அந்த ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் மாற்றுவதற்கு வங்கிகளில், ஏ.டி.எம். மையங்களில் மக்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு இன்று வரை ஆளாகி வருகிறது.  இந்த நிலையில், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், அதன் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.

  இந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரதீய ஜனதா தலைவர்கள் நிஷிகாந்த் துபே, ரத்தன்லால் கட்டாரியா, பிஜூ ஜனதாதள தலைவர் மகாதேவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

  இந்த கூட்டம், பண மதிப்பு நடவடிக்கையினால் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள், இந்திய ரிசர்வ் வங்கியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், வங்கிகளின் வாராக்கடன்களை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தது.

  இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பிற்கு இணங்க அவரும் கலந்து கொண்டார். இந்த நிலைக்குழுவின் முன்பாக அவர் ஆஜரானது இது மூன்றாவது முறை.

  இந்த கூட்டத்தில் அவர், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்தார்; இந்த நடவடிக்கை, ஒரு நல்ல முடிவு என அவர் குறிப்பிட்டார்; வாராக்கடன் பிரச்சினையில் மெதுவாக முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

  மத்திய அரசின் நிதிக்கொள்கையில் ரிசர்வ் வங்கிக்கு எந்த முரண்பாடும் இல்லை எனவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  ரிசர்வ் வங்கி வைத்துக்கொள்ள வேண்டிய ரொக்க கையிருப்பு அளவு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்துதல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் உர்ஜித் படேல் ஆஜரானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

  அதே போன்று, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல யோசனை அல்ல என்று அரசுக்கு நான் தெளிவுபடுத்தினேன். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87½ சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது, அதை நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர்” என்று கூறிய நிலையில், தற்போதைய கவர்னர் உர்ஜித் படேல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.  #RBI #UrjitPatel #ParliamentPanel
  பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார். #GST #RaghuramRajan #IndiaEconomicGrowth
  வாஷிங்டன்:

  அமெரிக்காவில் பெர்க்லி நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ‘இந்தியாவின் எதிர்காலம்’ என்ற தலைப்பில், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசினார். அவர் பேசியதாவது:-

  கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டுவரை, இந்தியா வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால், பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவை கடந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விட்டன.

  கடந்த ஆண்டு சர்வதேச பொருளாதாரம் வளர்ந்து வந்த நிலையில், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பது வியப்பாக உள்ளது.

  இந்தியா தற்போது 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டு வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாக சேரும் மக்களுக்கு இது போதாது. அவர்களுக்காக மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, நமக்கு பொருளாதார வளர்ச்சி அதிகம் தேவை. இந்த வளர்ச்சியுடன் திருப்தி அடையக் கூடாது.

  இந்தியாவின் வளர்ச்சி மீண்டும் சுதாரித்து எழும்போது, கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பை உருவாக்கி உள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. ஆகியவற்றில் இருந்து இந்தியா மீண்டு எழுந்தாலும் கூட கச்சா எண்ணெய் விலை, இந்திய பொருளாதாரத்துக்கு சற்று கடினமானதாகவே இருக்கும்.

  வாராக்கடன் பிரச்சினையும் இந்தியாவை பாதித்துள்ளது. அதற்கு திவால் சட்டம் தீர்வு அல்ல. பன்முனை அணுகுமுறை தேவை.

  இந்தியாவில், அதிகாரம் முழுவதும் மத்திய அரசிடம் குவிந்திருப்பதும், பிரச்சினையின் ஒரு அங்கம் ஆகும். மத்தியில் இருந்தே இந்தியா செயல்பட முடியாது. பலரும் சுமையை ஏற்றுக்கொள்ளும்போதுதான், இந்தியா இயங்கும்.

  இவ்வாறு ரகுராம் ராஜன் பேசினார். 
  பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், மத்திய-மாநில அரசுகளுக்கு மிகப்பெரும் பயன் கிடைத்திருப்பதாக நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். #NoteBan #ArunJaitley #Demonetisation
  புதுடெல்லி:

  பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கம் போன்றவற்றை ஒழிப்பதற்காக, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

  மத்திய அரசின் இந்த அறிவிப்பால் மக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் மேற்கொண்டது.

  பா.ஜனதா அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மிகப்பெரும் தோல்வியடைந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

  இந்த நிலையில் பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி அதன் பயன்களை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவர் கூறியிருந்ததாவது:-  பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகவும், இதனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்திருப்பதாகவும் தவறான விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

  அதிக அளவிலான பணத்தை கைப்பற்றுவது, இந்த நடவடிக்கையின் அங்கம் அல்ல. மாறாக அவற்றை முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தில் சேர்த்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் முக்கிய அம்சம் ஆகும். குறிப்பாக பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் பரிமாற்றமாக மாறுவது முக்கியமாகும்.

  அந்தவகையில் பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் பணப்பரிமாற்றம் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டு டிஜிட்டல் பரிமாற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. இத்தகைய முறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தால் வரிசெலுத்துவோரின் எண்ணிக்கையும் பெருகி உள்ளது.

  அதன்படி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 64 லட்சத்தில் (ஜி.எஸ்.டி.க்கு முன்) இருந்து 1.20 கோடியாக உயர்ந்து இருக்கிறது. சரக்கு மற்றும் சேவைகளின் உண்மையான நுகர்வுத்தன்மை அதிகரித்து, வரித்தளம் தற்போது அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் மறைமுக வரியும் அதிகரித்து உள்ளது.

  இது மத்திய-மாநில அரசுகளுக்கு மிகுந்த பயனை அளித்து இருக்கிறது. குறிப்பாக ஜி.எஸ்.டி.க்கு பிறகு ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் வரிவிதிப்பில் 14 சதவீதம் நிச்சய வளர்ச்சியை கண்டிருக்கின்றன.

  குறைவான வரி செலுத்துவோருக்கு ரூ.97 ஆயிரம் கோடி மற்றும் ஜி.எஸ்.டி. பங்களிப்போருக்கு ரூ.80 ஆயிரம் கோடி என ஆண்டுதோறும் வரிச்சலுகை வழங்கப்பட்ட பிறகும், வரி வசூல் அதிகரித்து இருக்கிறது. இதைப்போல நேரடி மற்றும் மறைமுக வரி விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகும் வரி வசூல் அதிகரித்து இருக்கிறது. வரித்தளம் விரிவடைந்து உள்ளது.

  இந்த தொகையை உள்கட்டமைப்பு மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்காகவும், பல்வேறு சமூக துறைகளிலுமே மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. இப்படி பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்டதால் 13 கோடி தொழில் முனைவோர் முத்ரா கடன்களை பெற்று இருக்கின்றனர். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டதுடன், ஒரு பதவி-ஒரே ஓய்வூதிய திட்டமும் இறுதியில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

  இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
  ஒரே நாளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்தியது போல், ராமர் கோவில் கட்டுவதற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். #BJP #UddavThackery
  மும்பை:

  மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் சிவசேனா கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சி தலைவர் உத்தவ தாக்கரே கலந்து கொண்டார்.

  அதன்பின்னர், உத்தவ் தாக்கரே செய்தியாளர்களிடம் கூறுகையில், ராமர் கோவில் கட்டுதல், பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது ஆகியவை பற்றி அவர்கள் (பாஜக) தேர்தலுக்கு முன்பாக பேசுகின்றனர். ஆனால், எந்த தேர்தல் (2019 அல்லது 2050) என்பது பற்றி தெளிவாக குறிப்பிடவில்லை. 

  உங்களால் ஒரே நாளில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை செயல்படுத்த முடிந்தது. அதுபோல், ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கையை நீங்கள் ஏன் எடுக்கவில்லை. ஏனெனில் நீங்கள் தான் பெரும்பான்மை பலத்துடன் உள்ளீர்கள்.

  மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட விவசாய கடன்கள் தள்ளுபடியின் ப்லன்களை அவர்களை சென்று சேரவில்லை. வளர்ச்சிதான் எங்கள் கொள்கை என்று முழங்கிய பாஜக, தற்போது ராமர் கோவில் விவகாரத்தை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 
  ×