என் மலர்
நீங்கள் தேடியது "Parliament Panel"
- மசோதா கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- தி.மு.க. சார்பில் வில்சன், செல்வகணபதி இடம்பெற்றுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் வருகிற ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு 129வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதா கடந்த 17ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பா.ஜ.க. எம்.பி. பி.பி. சௌத்ரி தலைமையிலான கூட்டுக்குழுவில் மொத்தம் 39 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரி, ரன்தீப் சுர்ஜேவாலா இடம்பெற்றுள்ளனர்.
தி.மு.க. சார்பில் வில்சன், செல்வகணபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், கூட்டுக்குழு உருவாக்கப்பட்ட நிலையில், இந்தக் குழுவின் முதல் கூட்டம் வருகிற ஜனவரி 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
பாராளுமன்ற கூட்டுக்குழு மசோதா குறித்து விரிவான ஆலோசனை நடத்தி மூன்று மாத காலத்தில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்பிக்க வேண்டும். மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சி செய்து வரும் நிலையில், கடந்த 2015ம் ஆண்டில் இருந்து பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட 12வது மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி இரவு, நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றியபோது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அதிரடியாக அறிவித்தார். ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் அன்று இரவு முதல் செல்லாது என அவர் அறிவித்தது, கருப்பு பண முதலைகள் முதல் சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அந்த ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் மாற்றுவதற்கு வங்கிகளில், ஏ.டி.எம். மையங்களில் மக்கள் பல மணி நேரம் வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு இன்று வரை ஆளாகி வருகிறது.

இந்த நிலையில், நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம், அதன் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வீரப்ப மொய்லி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.
இந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரதீய ஜனதா தலைவர்கள் நிஷிகாந்த் துபே, ரத்தன்லால் கட்டாரியா, பிஜூ ஜனதாதள தலைவர் மகாதேவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா உள்ளிட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த கூட்டம், பண மதிப்பு நடவடிக்கையினால் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள், இந்திய ரிசர்வ் வங்கியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், வங்கிகளின் வாராக்கடன்களை ஒழித்துக்கட்ட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அழைப்பிற்கு இணங்க அவரும் கலந்து கொண்டார். இந்த நிலைக்குழுவின் முன்பாக அவர் ஆஜரானது இது மூன்றாவது முறை.
இந்த கூட்டத்தில் அவர், பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு தனது ஆதரவை தெரிவித்தார்; இந்த நடவடிக்கை, ஒரு நல்ல முடிவு என அவர் குறிப்பிட்டார்; வாராக்கடன் பிரச்சினையில் மெதுவாக முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
மத்திய அரசின் நிதிக்கொள்கையில் ரிசர்வ் வங்கிக்கு எந்த முரண்பாடும் இல்லை எனவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரிசர்வ் வங்கி வைத்துக்கொள்ள வேண்டிய ரொக்க கையிருப்பு அளவு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்துதல் உள்ளிட்டவற்றில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழு முன்னிலையில் உர்ஜித் படேல் ஆஜரானது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அதே போன்று, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில், “ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல யோசனை அல்ல என்று அரசுக்கு நான் தெளிவுபடுத்தினேன். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87½ சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது, அதை நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர்” என்று கூறிய நிலையில், தற்போதைய கவர்னர் உர்ஜித் படேல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. #RBI #UrjitPatel #ParliamentPanel






