என் மலர்
நீங்கள் தேடியது "nigerians arrested"
- போலீசார் நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர்.
- அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது
அவினாசி:
திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பின்னலாடை சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.
குறிப்பாக வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு வந்து பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கில் தங்கியுள்ளனர். இவர்களில் சிலர் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அவ்வப்போது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்வதும் நடந்து வருகிறது.
அந்த வகையில், அவினாசியை அடுத்த கணேசபுரம் வைஷ்ணவி கார்டன் பகுதியில் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருப்பதாக அவினாசி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கு தங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரின் ஆவணங்களை பரிசோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த பாஸ்போர்ட் மற்றும் விசா தேதி காலாவதியாகி விட்டது தெரியவந்தது. ஆனாலும் அவர்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தனர்.
இதையடுத்து நைஜீரிய நாட்டை சேர்ந்த ஐகென்னா மேக்னஸ் (வயது 50), அவரது மனைவி ரீட்டா அவியான்போ (43), பிடிலிஸ் ஓனெரெக்லோ (46), இசுசுக்குவு ஜான் (40) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் 4 பேரும் அவினாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ராயபுரம் பகுதியில் தங்கியிருந்த நைஜீரியர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர்.
- சின்னான்நகர் பகுதியில் குடியிருந்த 3 பேரிடம் ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:
பனியன் வர்த்தகம் தொடர்பாக நைஜீரிய நாட்டினர் திருப்பூர் வந்து தங்கியிருந்து தங்களின் சொந்த நாட்டுக்கு ஆடைகளை அனுப்பி வைத்து வருகிறார்கள். இவ்வாறு வரும் நைஜீரிய நாட்டினர் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியிருப்பது அதிகரித்து வருகிறது. விசா காலம் முடிந்தும் இதுபோல் தங்கியுள்ள நைஜீரியர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் தலைமையில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் ராயபுரம் பகுதியில் தங்கியிருந்த நைஜீரியர்களின் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது சின்னான்நகர் பகுதியில் குடியிருந்த 3 பேரிடம் ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதில் ஒருவர் தனக்குரிய ஆவணங்களை கொண்டு வந்து போலீஸ் நிலையத்தில் கொடுத்ததால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் மற்ற 2 பேர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. விசா வழங்கப்பட்ட காலத்தையும் தாண்டி அவர்கள் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நைஜீரிய நாடு டேம்சூ பகுதியை சேர்ந்த பிரவுன்வூ (வயது 46), ஒலிசாக்பூ சுக்ஸ் டேவிட் (47) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.







