search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Next PM"

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மதியம் முன்னணி நிலவரம் தெரியவரும். மத்தியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று தெரிந்துவிடும்.
    சென்னை:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது.

    17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருக்கும் 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது.

    அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடந்து இருக்கிறது.



    கடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    எனவே மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது இன்று தெரிந்துவிடும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும்.

    ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

    தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

    சென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியிலேயே நடைபெறுகிறது.

    45 மையங்களிலும், ஒரு மையத்துக்கு 14 மேஜைகள் போடப்பட்டு, 19 முதல் 34 சுற்று வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கும். முடிவுகள் மேஜை வாரியாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அங்குள்ள அறிவிப்பு பலகையிலும், வேட்பாளர்கள் சுற்றுவாரியாக பெற்றுள்ள வாக்குகள் எழுதப்படும்.

    முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கடைசியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன.

    மதியம் முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், கடந்த தேர்தலை விட முடிவுகள் சற்று காலதாமதமாகவே வெளியாகும் என்று தெரிகிறது. மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரிந்தாலும், இறுதி முடிவுகளை பெறுவதற்கு இரவு ஆகலாம்.

    சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களான லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப்படை மற்றும் சென்னை மாநகர போலீசார் உள்ளிட்ட 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பென்சில், காகிதம் ஆகியவற்றை மட்டுமே உள்ளே எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஓட்டு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியை கண்காணிப்பதற்காக இந்திய தேர்தல் கமிஷன் சார்பில் 88 கண்காணிப்பு பார்வையாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். கூடுதல் மேஜைகள் அமைக்கப்படும் மையங்களுக்கு 2 பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவையும் சரிபார்த்து கையெழுத்திடுவார்கள். பின்னர் தேர்தல் நடத்தும் அதிகாரியும் கையெழுத்திட்டு, அதன் நகலை முகவர்களுக்கு வழங்குவார்கள்.

    பார்வையாளர் அனுமதியை பெற்ற பின்னர் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவை தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பார்.

    வாக்கும் எண்ணும் மையங்களில் 1,520 மத்திய துணை ராணுவ படை வீரர்கள், 4,960 ஆயுதப்படை போலீசார், 31 ஆயிரம் போலீஸ்காரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    சென்னையில் மட்டும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து எப்படி எந்திரங்கள் எடுக்கப்படுகிறது. அங்கிருந்து எப்படி மேஜைகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது போன்றவை ‘வீடியோ’ பதிவு செய்யப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    வாக்குகள் எண்ணும் பணியில் 17 ஆயிரத்து 128 பேர் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு ஒதுக்கப்படும் மையங்கள் விவரம் காலை 5 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். எனவே எந்த ஊழியர், எந்த மையத்துக்கு செல்வார்? என்பது முன்கூட்டியே யாருக்கும் தெரியாது. காலையில்தான் அவர்களுக்கு உத்தரவு வழங்கப்படும்.

    அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் ஆகலாம்.

    14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுவது வழக்கம். வாக்கு எண்ணும் மையம் சிறியதாக இருந்தால் 10 மேஜைகளும், வாக்கும் எண்ணும் மையம் பெரிதாக இருந்தால் அதிக மேஜைகளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று வைக்கலாம். சோழிங்கநல்லூர் சட்டசபை தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக 30 மேஜைகள் போடப்பட்டு இருக்கிறது. நாகர்கோவிலில் 10 மேஜைகள் போட்டு இருக்கிறோம்.

    தபால் ஓட்டுகள், மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் குலுக்கல் முறையில் 5 விவிபாட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்படும். இதுதவிர ‘17 சி’ படிவம்-மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் இடையே வித்தியாசம் இருந்தாலும், மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான ஒப்புகைச் சீட்டுகளை வெளியே எடுக்காமல் இருந்திருந்தாலும் விவிபாட் எந்திரங்கள் சரிபார்க்கப்படும்.

    மறுவாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே பதிவான வாக்கு எந்திரங்கள் தனியாக வைக்கப்பட்டு உள்ளன. அந்த எந்திரங்களில் எண்ணுவதற்கு தகுதி இல்லை என்று குறிப்பு ஓட்டப்பட்டு இருக்கும். எனவே மறுவாக்குப்பதிவு நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வருங்கால பிரதமரே வருக, அமேதியின் எம்.பி.யே... 2019-ம் ஆண்டின் பிரதமரே... என காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியை வரவேற்று அமேதியில் போஸ்டர் ஒட்டப்பட்டது. #RahuGandhi #Amethi #WelcomePoster
    அமேதி:

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான அமேதிக்கு 2 நாள் பயணமாக நேற்று சென்றார். அங்கு அவரை வரவேற்று காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர். அதில், வருங்கால பிரதமரே வருக, அமேதியின் எம்.பி.யே... 2019-ம் ஆண்டின் பிரதமரே... என குறிப்பிட்டு இருக்கின்றனர்.



    இதனிடையே ராகுல் காந்தி தன்னுடைய முகநூல் பக்கத்தில், “நான் அமேதிக்கு வந்திருப்பதற்கான காரணம், என் தொகுதி மக்களை சந்திப்பதற்காகவும், அவர்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்காகவும் தான்” என்று கூறியுள்ளார்.

    ராகுல் காந்தி அமேதிக்கு 4-ந் தேதியே வருவதற்கு திட்டமிட்டு இருந்தார். ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அப்போது தன்னுடைய வருகையை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #RahuGandhi #Amethi #WelcomePoster
    ×