search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellaiyappar"

    • ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • சுவாமி, அம்பாளுக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    15 நாட்கள் திருவிழா

    15 நாட்கள் நடைபெறக்கூடிய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.

    இதையொட்டி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு காசுமாலை, பவளமாலை, காலில் கொலுசு, தலையில் சடை என சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    தொடா்ந்து சிவபூஜைக்கு தேவையான தேங்காய், பழம், பூ, வஸ்திரம், தாம்பூலம் மற்றும் பழங்கள் உள்ளிட்ட 11 தாம்பூல தட்டுகளுடன் பஞ்ச வாத்தியங்கள் மற்றும் நாதஸ்வரம், மேளம் இசைக்க அம்பாள் சன்னதியில் இருந்து காந்திமதி அம்பாள் கையில் தாமரைப்பூவும், மலா் கூடையையும் ஏந்திய சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதி மகாமண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவபூஜை

    தொடா்ந்து அா்ச்சகா், அம்பாள்- சிவனை பூஜை செய்வது போன்ற பாணியில் துபம் இடுதல், பூக்களால் அா்ச்சனை செய்தல் என காந்திமதி அம்பாள், சுவாமி நெல்லையப்பருக்கு சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் சோடஷ தீபாராதனை சுவாமிக்கும்- அம்பாளுக்கும் காண்பிக்கப்பட்டு வேதம் வாத்யம், பஞ்ச புராணம் பாடப்பட்டது. நிறைவாக சுவாமிக்கு மூலஸ்தானத்தில் 5 பஞ்ச தட்டு கற்பூர ஆரத்தியும், அம்பாளுக்கு 1 பஞ்ச தட்டு ஆரத்தியும் காண் பிக்கப்பட்டது.

    பூஜைகள் முடிந்தபின் அம்பாள் ஊா்வலமாக தன் கோவிலுக்கு எழுந்தருளினாா். இந்நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழும். நாளை (சனிக்கிழமை) மதியம் கம்பா நதி காட்சிமண்டபத்தில் அம்பாளுக்கு- சுவாமி காட்சி கொடுக்கும் நிகழ்வும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் திருக்கல்யாண விழாவும் நடைபெற உள்ளது.

    அதனை தொடா்ந்து 3 நாட்கள் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழா நடைபெறும்.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    • தேர் நிறுத்தப்பட்டிந்த பகுதியில் கிடந்த பாட்டில்கள் மற்றும் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டு தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோவிலுமானது நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்ததால் வழக்கம் போல பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஆனித் திருவிழாவையொட்டி பந்தல்கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது. ஆனிப் பெருந்திருவிழாயொட்டி வருகிற 3-ந் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதைத்தொடர்ந்து திருவிழாவிற்கான ஏற்பாடுகள் திவிரமாக நடந்து வருகிறது. சுவாமி, அம்மன் தேரை சுற்றி கண்ணாடி கூண்டுகள் வைக்கப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு டவுன் கீழரத வீதியில் காந்திமதி அம்மன் தேர் நிற்கும் இடத்தில் உள்ள கண்ணாடி கூண்டுகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து தேர் நிறுத்தப்பட்டிந்த பகுதியில் கிடந்த பாட்டில்கள் மற்றும் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டு தூய்மை பணிகள் இன்று நடைபெற்றது. மேலும் தேரை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. 

    ×