search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Namakkal murder"

    திருச்செங்கோடு நடத்தையில் சந்தேகப்பட்டு சித்ரவதை செய்ததால் கணவர் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மோடமங்கலம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 66), தறி தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    கல்யாணசுந்தரம் தன்னுடன் வேலை பார்த்த பூங்கொடி (46) என்பவரை 2-வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும், 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மேலும் கல்யாணசுந்தரத்திற்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

    பூங்கொடியின் நடத்தையிலும் கல்யாண சுந்தரத்திற்கு சந்தேகம் ஏற்பட்டதால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும் பூங்கொடியை வேலைக்கு வரவேண்டாம் என்றும் சண்முகசுந்தரம் கூறி வந்தார்.

    நேற்று அதிகாலை 4 மணியளவில் தறிப்பட்டறை வேலைக்கு செல்வதற்காக கல்யாணசுந்தரம் புறப்பட்டார். அப்போது நானும் உங்களுடன் வருகிறேன் என பூங்கொடி கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கல்யாணசுந்தரம் என்னுடன் வந்தால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என மனைவியை மிரட்டினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பூங்கொடி கல்யாணசுந்தரத்தை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் ஆவேசமான அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கி கல்யாணசுந்தரத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன் பின்னர் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்களிடம் எதுவுமே அறியாதது போல் பூங்கொடி நாடகமாடினார். பின்னர் சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது பூங்கொடி போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் கூறினார். அதன் விவரம் வருமாறு:-

    வேறு சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கல்யாணசுந்தரம், எனது நடத்தையிலும் சந்தேகம் அடைந்து சித்ரவதை செய்தார். இதனால் நான் மனவேதனையில் தவித்தேன். நேற்று அதிகாலையும் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நான் கல்யாணசுந்தரத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு நாடகமாடினேன். ஆனால் போலீசார் விசாரணையில் உண்மையை கண்டு பிடித்து என்னை கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து பூங்கொடியை கைது செய்த போலீசார் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
    பள்ளிப்பாளையம் அருகே வீடு தொடர்பான பிரச்சனையில் தந்தை தனது மகனை தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
    பள்ளிப்பாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள அலமேடு பகுதியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 65). இவரது மகன் கார்த்தி (28).

    இவர் பள்ளிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே தாங்கள் வசித்து வரும் வீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இது சம்பந்தமாக நேற்று இரவு மீண்டும் தந்தைக்கும், மகனும் இடையே சண்டை ஏற்பட்டது.

    இதனால் கோபம் அடைந்த சொக்கலிங்கம் மகனை இனிமேல் விட்டு வைக்கக்கூடாது, அவரை கொலை செய்து விட முடிவு செய்தார். இதற்காக மகன் வீட்டில், மகன் தூங்கும் நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தார்

    இரவு சாப்பாடு முடித்து விட்டு கார்த்தி வீட்டில் படுத்து தூங்கினார். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் சொக்கலிங்கம் வீட்டிலிருந்த குழவிக்கல்லை எடுத்து வந்து கார்த்தியின் தலையில் ஓங்கி போட்டார்.

    இதில் தலை நசுங்கி கார்த்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சொக்கலிங்கம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இது பற்றி அக்கம், பக்கத்தினர் பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்தி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சொக்கலிங்கத்தை போலீசார் பிடித்து இந்த கொலை வீடு தொடர்பாக நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக நடந்ததா? என கேட்டு துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு தான் முழுவிபரங்களும் தெரியவரும்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பட்டதாரி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா சின்னப்பநாயக்கன் பாளையம், மாரியம்மன் கோவில் அருகே வசித்து வருபவர் செல்வராஜ். விசைத்தறி அதிபர். இவரது மகன் வேலழகன்(வயது 27). பி.காம் பட்டதாரி.

    நேற்று இரவு இவரும், இவரது நண்பர்கள் விவேக், விக்னேஸ்வரன், பிரசாந்த், விக்கி என்கிற விக்னேஷ் ஆகிய 5 பேரும் குமாரபாளையம், சேலம் மெயின் ரோடு பங்களா அருகே இருக்கும் ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட சென்றனர். அப்போது அந்த ஓட்டல் உரிமையாளர் லட்சுமணன், அவரது மகன் செந்தமிழ்வேலன் ஆகியோர் ஓட்டலை மூடிக்கொண்டிருந்தனர். இந்த ஓட்டலுக்கு சென்ற வேலழகன் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரும் தங்களுக்கு புரோட்டா, தோசை, ஆம்லேட் வேண்டும். உடனே தயார் செய்து கொடுங்கள் என்று கேட்டனர். அதற்கு லட்சுமணன் கடையை மூடி விட்டேன். அடுப்பையும் அணைத்து விட்டேன். இனிமேல் டிபன் செய்து கொடுக்க முடியாது. வேறு ஓட்டலுக்கு செல்லுங்கள் என்று கூறினார்.

    இந்த நிலையில் பார்சலுக்கு ஒருவர் ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்தார். இதனால் டிபன் பார்சல் செய்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நபர் வந்து கேட்டதும் லட்சுமணன் பார்சல்களை எடுத்துக்கொடுத்தார். இதை பார்த்ததும் 5 பேரும் இப்போது வந்தவருக்கு பார்சல் கொடுக்கிறாய். எங்களுக்கு உணவு இல்லை என்று சொல்கிறாய்? என்ன நியாயம் என்று கேட்டனர்.

    இதனால் லட்சுமணனுக்கும், அவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாய் தகராறு முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த வேலழகன் கற்களை எடுத்து லட்சுமணனை தாக்க முயன்றார். அவரை நண்பர்கள் பிடித்து விலக்கி விட்டனர். அப்போது வேலழகன் விறகு கட்டையை எடுத்து வந்து லட்சுமணனை அடிக்க பாய்ந்தார்.

    லட்சுமணனும், அவரது மகன் செந்தமிழ்வேலனும் சேர்ந்து வேலழகனை பிடித்தனர். பின்னர் அந்த விறகு கட்டையை லட்சுமணன் வாங்கி திரும்ப வேலழகனின் தலையில் பலமாக அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை நண்பர்கள் மீட்டு குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வேலழகன் பரிதாபமாக இறந்தார். குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த கொலை சம்பவம் குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் லட்சுமணன் மற்றும் அவரது மகன் செந்தமிழ்வேல் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலையுண்ட வேலழகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு பல்வேறு இடங்களில் வரண் பார்த்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டார். விசைத்தறி அதிபர் மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குமாரபாளையத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    ×