என் மலர்
நீங்கள் தேடியது "murder of"
- உடலை மீட்டு போலீசார் விசாரணை
- கொலை செய்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவை பச்சா பாளையத்தில் உள்ள காலி இடத்தில் கை,கால்கள் கட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் 25 வயது மதிக்க தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
இதனை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை ஆய்வு செய்தனர்.
அப்போது வாலிபர் இறந்த 2 நாட்கள் இருக்கும் எனவும், அவரை யாரோ கை, கால்களை கட்டி கொலை செய்து அடையாளம் காண முடியாதபடி முகத்தை சிதைத்து வீசி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து செட்டிப்பாளையம் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்றும், அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






