search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mountain bees"

    • திருப்பத்தூர் அருகே மலை தேனீக்கள் கொட்டி 20 பேர் காயமடைந்தனர்.
    • மலை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு கிராமத்தில் இறந்த மூதாட்டிக்கு 5-ம் நாள் காரியமாக சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது அய்யர் நெருப்பு வைத்து சடங்குகள் செய்துவிட்டு நெருப்பை அணைப்பதற்காக தண்ணீரை அதன்மேல் ஊற்றினார். இதனால் எழுந்த புகையால், அருகே புளிய மரத்தில் இருந்த மலைத்தேனீக்கள் கூடு கலைந்தது. இதனால் தேனீக்கள் படையெடுத்து வந்து அங்கிருந்த நபர்களை விரட்டி கொட்டத் தொடங்கியது. வயதானவர்கள் தப்பித்து ஓட முடியாமல் தேனீக்களிடம் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். இதில் 20 பேர் காயமடைந்து திருப்பத்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 75 வயது மதிக்கத்தக்க ரத்தினம் என்பவர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மலை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாலப்பட்டி மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது.
    • பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாலப்பட்டி மெயின் ரோட்டில் அரசு ஆரம்ப பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

    பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகளை இந்த மலைத்தேனீக்கள் கொட்டியதால் காயமடைந்து வந்தனர். மாணவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் தேனீக்கள் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதியினர் மற்றும் மாணவர்களின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு விரைந்து, வேப்பமரத்தில் கூடு கட்டி இருந்த மலைத் தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.

    திருமங்கலம் அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அந்தப்பகுதி மக்கள் காயமடைந்தனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி உள்ளது. இன்று காலை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர்.

    அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த மலை தேனீக்களின் கூடு கலைந்தது. இதனால் ஆயிரக்கணக்கான தேனீக்கள் படை எடுத்து வந்து மாணவ, மாணவிகள் மற்றும் அந்தப்பகுதி மக்களை கொட்டியது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 20-க்கும் மேற்பட்டேர் காயமடைந்தனர்.

    அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மீனாட்சி (வயது 80) என்பவரை தேனீக்கள் கொட்டியதில் மயக்கம் அடைந்தார். அவரை அந்தப்பகுதியினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோல் வேல்மணி என்ற பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தேனீக்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ×