search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Model test"

    • குறு வினாக்கள் அடங்கிய மாதிரி தேர்வு நடத்தும்படி பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.
    • மாதிரி தேர்வு வழியே மாணவர்களின் கற்றல் திறனை எளிதில் அறிய முடியும்.

    திருப்பூர் :

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணிகள் முறையாக நடக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள மாதம்தோறும் மண்டல ஆய்வு கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. இந்த கூட்டங்களில், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் பங்கேற்று பள்ளிகளின் மேம்பாட்டுக்கு திட்டமிடுகின்றனர்.

    இந்நிலையில் மண்டல அளவிலான ஆய்வுக்கு செல்லும் ஆசிரியர்கள், அதிகாரிகள் குழுவினர், மாணவர்களுக்கு அவர்களின் வகுப்புக்கு ஏற்ற பாடத் திட்டத்தில் இருந்து, குறு வினாக்கள் அடங்கிய மாதிரி தேர்வு நடத்தும்படி பள்ளிக்கல்வி கமிஷனரகம் அறிவுறுத்தி உள்ளது.

    இந்த மாதிரி தேர்வு வழியே மாணவர்களின் கற்றல் திறனை எளிதில் அறிய முடியும். மாணவர்களுக்கு தேவையான கற்பித்தல் முறைகளை வரையறுக்க முடியும் என திருப்பூர் மாவட்ட பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.
    • மாதிரி தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு வருகிற 24-ந் தேதி( ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

    மாதிரி தேர்வு

    இதனை ஒட்டி நெல்லையில் குரூப்-4 தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இன்று குரூப்-4 மாதிரி தேர்வு நடைபெற்றது. பாளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த இந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார்.

    500 தேர்வர்கள்

    முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் மரிய சூசை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கணபதி சுப்ரமணியம் வரவேற்றார். முதன்மை நூலகர் வயலட் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த தேர்வில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதியம் நெல்லை மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பரிசு வழங்கினார். முதல் 8 இடம் பிடித்த தேர்வர்களை அவர் பாராட்டி பரிசு வழங்கினார்.

    ×