search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister balakrishna reddy"

    திரு.வி.க. நகர் தொகுதியில் விளையாட்டு திடல் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது தி.மு.க. உறுப்பினர் தாயகம் கவி (தி.மு.க.) திரு.வி.க. நகர் தொகுதி 75-வது வட்டத்தில் உள்ள சிவசண்முகபுரத்தில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு அமைச்சர் பாலகிரு‌ஷ்ண ரெட்டி பதில் அளித்து கூறும் போது “விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க தமிழக அரசு பல்வேறு சலுகைகளையும் உதவிகளையும் வழங்கி வருகிறது. சென்னையில் மட்டும் 220 இடங்களில் விளையாட்டு திடல்கள் உள்ளன. உறுப்பினர் சொல்லும் இடத்தில் விளையாட்டு திடல் அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என்றார்.

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டிக்கு, ஓசூரில் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். #ministerbalakrishnareddy
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டியை நியமனம் செய்து, அ.தி,மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டனர்.

    இதையடுத்து, மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி நேற்று மாலை ஓசூர் வந்தார்.

    அவருக்கு, ஓசூர் நகர செயலாளர் நாராயணன், ஒன்றிய துணை செயலாளர் ஜெயராம் ஆகியோர் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், மேள, தாள வாத்திய முழக்கத்துடனும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ஓசூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் நடராஜன், வக்கீல் ஜீவானந்தம், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வாசுதேவன், உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். 

    பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    இதையடுத்து, பர்கூர் எம்.எல்.ஏ. சி.வி. ராஜேந்திரன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பாலகிருஷ்ணாரெட்டியை வாழ்த்தி பேசினார்கள். பின்னர் நன்றி தெரிவித்து பாலகிருஷ்ணரெட்டி பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி. பெருமாள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். #ministerbalakrishnareddy 
    ×